வஞ்சிக்கப்படும் பீடி தொழிலாளர்கள்

பீடி அதிபர்கள் ஒன்று சேர்ந்து எஸ்.ஐ ஒருவர் பீடி ஏற்றிச் செல்லும் வண்டிகளை நிறுத்தி லஞ்சம் கேட் பதாக கலெக்டரிடம் புகார் தெரிவிக்க விசாரணையில் இறங்கினோம்.


ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் பிரதான தொழிலாக விளங்கி வருவது பீடி சுற்றும் தொழில். சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நெல்லை தென்காசி மாவட்டங்களில் செய்யது பீடி, காஜாபீடி, மங்களூர் கணேஷ் பீடி, கிங்பீடி போன்ற பெரிய நிறுவனங்களும் 50 க்கும் மேற்பட்ட சிறிய நிறுவனங்களும் உள்ளனஇந்த நிறுவனங்கள் பீடி சுற்றத் தேவையான மூலப்பொருள்களை தொழிலாளர்களுக்கு கொடுத்து , அவர்களிடமிருந்து பீடியாக பெற்றுக் கொண்டு, அதற்கு உண்டான கூலியை வழங்கி வருகின்றனர்.


பின்னர், அவற்றை நிஷிஜி உட்பட வரிகள் முறையாக செலுத்தி விற்பனை செய்து வருகிறார்கள். இதில் பெரும்பாலான நிறுவனங்கள் முறையாக ஆவணங்கள் பராமரிக்காமலும், தொழிலாளர்களுக்கு சரியான சம்பளம் வழங்காமலும், பி.எப். போன்ற எந்த வித பலனும் தொழிலாளர்களுக்கு கிடைக்காத வண்ணம் பாஸ்புக் வழங்காமல், சிறிய அட்டைகள் மூலம் கணக்குகளை குறித்து வைத்துக் கொண்டு, கிராமங்களை குறிவைத்து தொழில் நடத்தி வருவதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்


மேலும், இவ்வாறு பெறப்படும் பீடிகளை சம்பந்தமே இல்லாத உறவினர்கள் பெயரில் வருங்கால வைப்பு நிதி கணக்கு தொடங்கி, அவர்கள் பீடி சுற்றுவது போல கணக்கு காண்பித்து பலன்களை அனுபவித்து வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். இத்தகைய பீடி தயாரிப்பாளர்கள், கிராமங்களை குறிவைத்து மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணிக்குள்ளாக வந்து பீடிகளைப் பெற்றுக் கொண்டு சென்று விடுகின்றனர்.


இதனால், உண்மையான பீடித்தொழிலா ளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், ஊரடங்கு நேரத்தில் விதிமுறைகளை மீறி, போலி பீடிகள் கொண்டு சென்றதாகவும் பெரும்பாலான காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதில், சேர்ந்த மரம் காவல் நிலையத்தில் கூடுதலாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார்கள் குறித்து, சேர்ந்தமரம் காவல் நிலைய எஸ்.ஐ தினேஷ்பாபுவிடம் பேசினோம். அவர், ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய பொருள்கள் கொண்டு செல்ல அனுமதி உண்டு. ஆனால் பீடி பண்டல்கள் அத்தியாவசிய பொருள் இல்லை. எனவே விதிகளுக்கு உட்பட்டு தான் வழக்குகள் போடப்படுகிறது. இது தவிர ஆவணங்கள் இல்லாத போலி பீடி களும் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது என்றார்.


இது ஒருபுற மிருக்க, கேன்சர் போன்ற உயிர்க்கொல்லி நோய் எளிதில் வருவதற்கு வாய்ப்புள்ள இந்த அபாயகரமான தொழில் செய்யும் பீடித்தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்காமல் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கவும் , முறையாக அவர்களுக்கு பி.எப் உள்ளிட்டகணக்குகள் பராமரிக்கப் படுகிறதா என்பதையும், போலீ நிறுவனங்களை களையெடுக்கவும், தொழிலாளர் நலத்துறை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பீடித்தொழிலாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். செய்யுமா மாவட்ட நிர்வாகம்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்