மத்திய அரசு அறிவித்துள்ள பொது முடக்கத்தில் உள்ள நிபந்தனைகள் என்ன...

நாடு முழுவதும் ஜூன் 30 வரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொது முடக்கத்தை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.


நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்த பொது முடக்கம் நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், பிரதமருடன் உள்துறை அமைச்சர் நடத்தி ஆலோசனையின் பிறகு பொது முடக்கம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.


அதன்படி, ஜூன் 30 வரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பொது முடக்கம் நீட்டிப்புச் செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன் விவரங்கள் வருமாறு: * நாடு முழுவதும் ஜூன் 8 ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களைத் திறக்க மத்திய அரசு அனுமதி.


ஜூன் 8 முதல் நாடு முழுவதும் அனைத்து ஹோட்டல்கள், மற்றும் ஷாப்பிங் மால்கள் திறக்க மத்திய அரசு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மது, போதைப் பொருட்களைப் பயன்படுத்துவது தடை செய்யப்படுகிறது.


சூழ்நிலைக்கு ஏற்ப தியேட்டர், உடற்பயிற்சிக் கூடங்கள் திறப்பது குறித்து மாநில அரசே முடிவு செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது. கடைகளில் 5 நபருக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.


அதிக எண்ணிக்கையில் கூடுவதும் தடை செய்யப்படுகிறது. மேலும் திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிக்கான கட்டுப்பாடு தொடர்கின்றன.


முதியோர், கர்ப்பிணிகள், 10 வயதிற்கு உட்பட்டவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். பொது இடங்களில் முகக் கவசம் அணிவதும், சமூக இடைவெளியைப் பின்பற்றுவதும் கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும். ஆகவே அந்த இடைப்பட்ட நேரங்களில் யாரும் வெளியே நடமாடக்கூடாது. முடிந்த வரை வீட்டிலிருந்தே வேலை செய்ய (work from home) ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் பணியிடங்களில் முடிந்தளவுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தல் செய்துள்ளது. மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்திய பிறகே, பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும்.


தொற்றின் தாக்கத்தைப் பொறுத்து மெட்ரோ ரயில்களை இயக்க அனுமதிக்கப்படும் என்று விரிவாக நிபந்தனைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


சிகப்பு மண்டலங்களில் என்னென்ன விதிமுறைகள் விதிக்க வேண்டும் என்பதை மாநில அரசுகள் முடிவு எடுத்துக் கொள்ளலாம் - மத்திய உள்துறை அமைச்சகம்