தமிழகத்தில் என்னென்ன கடைகள் திறக்க அனுமதி...

சென்னையில் அத்தியாவசியப் பொருட்களின் கடைகள் காலை ஆறு மணி முதல் மாலை ஐந்து மணி வரை அனுமதிக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.


கொரோனா ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட ஊரடங்கு வழிமுறைகளை முதல்வர் வெளியிட்டுள்ளார்.


சென்னை:
அதில் சென்னையில், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர, பிற இடங்களில், கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது . ஐ.டி.நிறுவனங்கள் 20 பணியாளர்களை மட்டுமே கொண்டு செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


அத்தியாவசியப் பொருட்களின் கடைகள் காலை ஆறு மணி முதல் மாலை ஐந்து மணி வரை அனுமதிக்கப்படும் எனவும், உணவகங்களும் காலை ஆறு முதல் இரவு ஒன்பது வரை, பார்சல்கள் மட்டுமே வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


சலூன் கடைகள் தவிர, அனைத்து தனிக்கடைகளும், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமானப் பொருட்கள், சானிடரிவேர், எலெக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் தனிக் கடைகள், மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோகப் பொருட்கள், மின் மோட்டார், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட தனிக்கடைகள், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.


பிளம்பர், எலெக்டிரிஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள், சிறப்புத் தேவைகள் உள்ளோருக்கான உதவியாளர்கள், வீட்டு வேலை பணியாளர்கள் ஆகியோர், சென்னை மாநகராட்சி ஆணையர் / சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம்


உரிய அனுமதி பெற்று பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.


சென்னை தவிர்த்த பிற பகுதிகள்:
சென்னையைத் தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகளில், 50 சதவீத பணியாளர்களை கொண்டு தொழிற்சாலைகள் இயங்கவும், மொபைல் போன், கம்ப்யூட்டர், வீட்டு உபயோக பொருட்கள் கடைகளை நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


கிராமப்புறங்களில் உள்ள அனைத்து தனிக்கடைகளும், காலை ஒன்பது முதல் மாலை ஐந்து மணி வரை செயல்படலாம் எனவும் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில், அனைத்து கடைகளும் காலை பத்து முதல் மாலை ஐந்து வரை செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


பிளம்பர், எலெக்டிரிஷியன், ஏசி மெக்கானிக், தச்சர் உள்ளிட்ட சுயதிறன் பணியாளர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னர் அனுமதிக்கப்படுவர். மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோகப் பொருட்கள், மின் மோட்டார் ரிப்பேர், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட அனைத்து தனிக்கடைகள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். கட்டுபானப் பொருட்களை எடுத்துச் செல்லலாம்.


குறிப்பாக தமிழகம் முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் என அறிவிக்கப்பட்ட இடங்கள் அனைத்திலும், இந்த ஊரடங்கு தளர்வு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு