மக்களே.. தமிழகத்தில் எவையெல்லாம் ரெட், ஆரஞ்சு, பச்சை ஜோன்கள்.. வெளியானது லிஸ்ட்..

சென்ன்னை: தமிழத்தில் சென்னை உள்பட 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களில் உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.


இதேபோல் 24 மாவட்டங்கள் ஆரஞ்சு லிஸ்டில் உள்ளதாகவும் ஒரு மாவட்டம் மட்டும் பச்சை லிஸ்டில் உள்ளதாகவும் அறிவித்துள்ளது. அவற்றின் விவரங்களை இப்போது பார்ப்போம்.


கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கு வரும் மே 3ம் தேதியுடன் நிறைவு பெறறுகிறது. இந்நிலையில் கொரோனா பாதித்த மாவட்டங்களை மத்திய அரசு மூன்று வண்ணங்களாக பிரித்துள்ளது.


அதாவது சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என வகைப்படுத்தி உள்ளது,
மே 4 தேதி முதல் பச்சை மாவட்டங்களில் ஊரடங்கில் தளர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அதேபோல் ஆரஞ்சு மாவட்டங்களில் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் மட்டும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் சிவப்பு மண்டலங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளது.
தமிழகம் உட்பட நாடு முழுக்க எந்த மாவட்டங்கள் சிவப்பு, மஞ்சள், பச்சை மண்டலத்தில் உள்ளன? முழு லிஸ்ட்


மத்திய அரசு அறிவிப்பு
இந்நிலையில் மத்திய அரசு 740 மாவட்டங்களை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என வகைப்படுத்தி உள்ளது. அதில் தமிழகத்தில் சென்னை உள்பட 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களில் உள்ளன. இதேபோல் தேனி, கோவை, கடலூர் உள்பட 24 மாவட்டங்கள் ஆரஞ்சு லிஸ்டில் உள்ளதாகவும் ஒரு மாவட்டம் மட்டும் பச்சை லிஸ்டில் உள்ளது.


12 மாவட்டங்கள்
சென்னை, மதுரை, நாமக்கல், தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், ராணிப்பேட்டை, விருதுநகர், வேலூர், திருவாரூர், காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன.இங்கு மே4ம் தேதி முதல் கட்டுப்பாடுகள் கடுமையாக இருக்கும் என்று தெரிகிறது


24 மாவட்டங்கள்
தேனி, தென்காசி, நாகப்பட்டினம், திண்டுக்கல், விழுப்பரம், கோவை, கடலூர், சேலம் கருர், தூத்துக்குடி, திருச்சி, திருப்பத்தூர், கன்னியாகுமரி, திருவண்ணாமலை, ராமநாதபுரம், திருநெல்வேலி, நீலகிரி, சிவகங்கை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை மற்றும் தருமபுரி என 24 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலத்தில் உள்ளன. இங்கு மே 4ம் தேதி முதல் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கிருஷ்ணகிரி
பச்சை மண்டலங்கள் : தமிழகத்தில் பச்சை மண்டலங்கள் என்ற லிஸ்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே உள்ளது. இங்கு கொரோனா யாருக்கும் பாதிக்கவில்லை எனவே இந்த ஒரு மாவட்டத்தில் மே 4ம் தேதி முதல் ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.


ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வு குறித்து நாளை மே 2ம் தேதி முதல்வர் அமைச்சரவை ஆலோசனைக்கு பின்னர் முக்கிய அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு