தீ போல பரவும் கொரோனா.. ஒரு வாரத்தில் 58% நோயாளிகள்...

சென்னை: தமிழகத்தில் மே 3ம் தேதி முதல் பல்வேறு வகைகளில் லாக்டவுன் தளர்வு செய்யப்பட்டது. உச்சகட்டமாக, மே 7ம் தேதி டாஸ்மாக் மதுபானக் கடைகளும் திறக்கப்பட்டன.


டீக்கடையே திறக்க அனுமதி தராமல் டாஸ்மாக் அனுமதி அவசியமா என்று தொழிலாளர்களும், எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில்தான், டீக்கடைகளுக்கும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஒரு பக்கம் மத்திய அரசு ரயில்களையே இயக்க தொடங்கிவிட்டது. இப்படியாக மக்கள் இத்தனை நாட்கள், அடைபட்டு கிடந்து தற்போது மொத்தமாக வெளியே அனுப்பப்பட்டுள்ளனர்.


கொரோனா பரவல்
ஆனால் கொரோனா இப்போதுதான், முன்பைவிட வேகமாக பரவி வருகிறது. நோயோடு வாழ பழக வேண்டியதுதான் என மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளரும் அறிவித்துவிட்ட நிலையில், எப்படி பழகுவது என புரியாமல், நோயை விலை கொடுத்து வாங்கிக் கொண்டுள்ளார்கள் தமிழக மக்கள் என்பதற்கு இந்த புள்ளி விவரம் ஒரு சான்று.


குறைந்த பரிசோதனை
தமிழகத்தில் நேற்றுமுன்தினம், ஒரே நாளில் 669 கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளன. நேற்று அதைவிட கொடுமை.


பரிசோதனை அளவு குறைந்த நிலையிலும், நேற்றுதான் இதுவரை இல்லாத அளவுக்கு, பாதிப்பு அதிகம். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிதாக 798 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்தனர். தமிழகத்தில் பாதித்தோரின் எண்ணிக்கை 8,002 ஆக உயர்ந்துள்ளது.


3வது இடத்தில் தமிழகம்
கொரோனாவுக்கு அதிகம் பேரை பலி கொடுத்த மாநிலங்களான, மகாராஷ்டிரா மற்றும் குஜராத்துக்கு அடுத்தபடியாக தமிழகம், நோயாளிகள் எண்ணிக்கையில் 3வது இடத்தில் உள்ளது.


டெல்லியை 2 நாள் முன்பே தாண்டிவிட்டது தமிழகம். நேற்று பாதிப்பை தவிர்த்து, நேற்று முன்தினம் வரையிலான நிலவரத்தை வைத்து ஒரு புள்ளி விவரத்தை பார்க்கலாமா.


58 சதவீதம்
தமிழகம் தொடர்ந்து ஏழு நாட்களில் 4181 கொரோனா கேஸ்களை பதிவு செய்திருந்தது. இது தமிழக பாதிப்பின் மொத்த எண்ணிக்கையில் 58 சதவீதமாகும். மகாராஷ்டிராவில் 1,943 ஒரே நாளில் புதிய கேஸ்கள் பதிவாகியுள்ளன.


மகாராஷ்டிரா கடந்த ஏழு நாட்களில் 6 நாட்கள் தினமும் 1000 க்கும் மேற்பட்ட புதிய கேஸ்கள் பதிவாகின. கடந்த 7 நாட்களில் மாநிலத்தில் பதிவான புதிய, கேஸ்கள், அதன், மொத்த எண்ணிக்கையில் 41.5 சதவீதமாக உள்ளன.


பிற மாநிலங்கள்
பீகார் ஒரே நாளில் 105 கேஸ்களை பதிவு செய்தது. அதன் எண்ணிக்கை 696 ஆக உயர்ந்தது. ஒடிசா (83) மற்றும் கர்நாடகா (54) ஆகியவை 24 மணிநேரத்தில், தங்கள் மாநிலங்களில், முதல் முறையாக அதிகமான பாதிப்பை பதிவு செய்தந. நேற்று முன்தினம் நிலவரப்படி, அவற்றின் எண்ணிக்கை முறையே 377 மற்றும் 848 ஐ எட்டியது.


எப்படி அதிகரித்தது
இந்த புள்ளி விவரங்களையெல்லாம் பார்த்தால், கடந்த 7 நாட்களில் புதிய நோயாளிகள் பதிவு செய்யப்படும் விகிதத்தை ஒப்பிட்டால், மகாராஷ்டிராவை விடவும், தமிழகம் அதிகம் என தெரிகிறது. மகாராஷ்டிராவில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்யப்பட்டிருக்கலாம்.


ஆனால், ஏற்கனவே அந்த மாநிலத்தில் பாதிப்பு அதிகம் என்பதால், புதிய நோயாளிகள் இவ்வளவு அதிகமாக சேர்ந்தாலும், மொத்த சதவீதத்தில் அது குறைவாக உள்ளது.


ஆனால், தமிழகம் குறுகிய காலத்திற்கு கொரோனாவை கட்டுக்குள் வைத்திருந்தது. எனவே கடந்த 7 நாட்களில் பாதிப்பு அதிகரிப்பதால், மொத்த சதவீதத்தில் இது அதிகமாக உள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு