டார்கெட் டெஸ்டிங்.. இதுதான் இப்போது ஒரே தீர்வு.. சென்னையில் தீவிரம் அடையும் கொரோனா.. என்ன செய்வது..

சென்னை: சென்னையில் கொரோனா தீவிரம் அடைந்து வரும் நிலையில் தற்போது செய்யப்படும் கொரோனா சோதனை முறைகளில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கோரிக்கை வைக்க தொடங்கி உள்ளனர்.


தமிழகத்தில் கொரோனா தீவிரம் எடுக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் நேற்று மேலும் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தமாக தமிழகத்தில் 2323 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.


சென்னையில் 138 பேருக்கு நேற்று கொரோனா ஏற்பட்டுள்ளது.
சென்னையில் மொத்தம் 906 பேருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதனால் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 1035 ஆக உயர்ந்துள்ளது.


இன்று கொரோனா காரணமாக யாரும் பலியாகவில்லை.
உலகளவில் கொரோனாவால் மொத்தம் 2,30,000 பேர் மரணம்.. அமெரிக்கா, இங்கிலாந்தில் நிலைமை மோசம்


அறிகுறி இல்லை
தற்போது சென்னையில் வரும் கொரோனா கேஸ்கள் எதுவும் அறிகிறி இல்லாமல்தான் ஏற்படுகிறது. சென்னையில் ஏற்பட்ட கொரோனா கேஸ்களில் 98% அறிகுறி இல்லாத கேஸ்கள் என்று ஏற்கனவே சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.


அதாவது ஒருவருக்கு கொரோனா வந்தால் அவருக்கு அறிகுறி இருப்பது இல்லை. கடைசியில் அவர் தீவிரம் அடைந்து உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் சேரும் போதுதான் அவருக்கு கொரோனா இருப்பதே தெரிகிறது.


சென்னையில் 98 சதவீதம் பேருக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா
எத்தனை டெஸ்ட் செய்கிறார்கள்
இதுதான் சென்னையில் கொரோன கேஸ்கள் அதிகரிக்க காரணம்.


அறிகுறியே இல்லாமல் ஒருவர் தனது உறவினர்கள் உடன் பழகுகிறார். இதனால் அவர் மூலம் பலருக்கு எளிதாக கொரோனா பரவுகிறது. அறிகுறி இல்லாத நபர்கள்தான் சென்னையில் இன்னும் பலருக்கு கொரோனாவை பரப்புகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இதனால் சென்னையில் அறிகுறி உள்ளவர்கள் மட்டுமின்றி அறிகுறி இல்லாத நபர்களுக்கும் ரேண்டம் டெஸ்டிங் செய்ய வேண்டும்.
அதிகமாக செய்கிறார்கள்
தமிழகத்தில் தற்போது சென்னையில்தான் அதிகமாக கொரோனா டெஸ்ட் செய்கிறார்கள். தினமும் 2 ஆயிரம் வீதம் சென்னையில் மட்டும் கொரோனா சோதனைகளை செய்கிறார்கள்.


ஆனால் இது கொரோனா அறிகுறி உள்ளவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டும் செய்யப்படும் சோதனை ஆகும். இதை விட்டுவிட்டு மொத்தமாக சென்னையில் ரேண்டம் சோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். ரேண்டமாக வெவ்வேறு நபர்களுக்கு சோதனை செய்ய வேண்டும்.


டெஸ்ட் வழி முறையை மாற்றலாம்
இப்படி ரேண்டம் டெஸ்ட் செய்வதன் மூலம் சமூக பரவல் எப்படி இருக்கிறது என்று எளிதாக கண்டுபிடிக்க முடியும். ஆனால் சென்னையில் எப்படி ரேண்டம் டெஸ்ட் செய்வது என்று கேள்வி எழுந்துள்ளது. சாதாரணமாக சாலையில் செல்லும் ஒருவரை அழைத்து கொரோனா சோதனை செய்ய முடியாது.


அதற்கு பதிலாக டார்கெட்டட் டெஸ்டிங் செய்ய வேண்டும். இந்த டார்கெட் டெஸ்ட் சென்னையில் கொரோனா பரவல் எப்படி உள்ளது என்று கண்டுபிடிக்க உதவும். அதை கட்டுப்படுத்தவும் உதவும்.


டார்கெட் டெஸ்டிங் என்றால்?
டார்கெட் டெஸ்ட் என்றால் சென்னையில் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டால் அவரின் நெருங்கிய உறவினர் எல்லோர்க்கும் கொரோனா சோதனை செய்ய வேண்டும்.


அறிகுறி இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக கொரோனா சோதனை செய்ய வேண்டும். அதேபோல் ஹாட் ஸ்பாட் தெருவில் ஒருவர் விடாமல் எல்லோருக்கும் அறிகுறி இல்லையென்றால் கூட கொரோனா சோதனை செய்ய வேண்டும்.


உதாரணமாக கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டு இருக்கும் ஐஸ் ஹவுஸ் பகுதி முழுக்க எல்லா வீடுகளில் உள்ள மக்களுக்கும் கொரோனா சோதனைகளை செய்ய வேண்டும்.


வேறு எங்கு சோதனை
ரெட் சோன் பகுதிகளில் இப்படி செய்ய வேண்டும். அதேபோல் இன்னொரு பக்கம் கொரோனா பாதிக்க அதிகம் வாய்ப்புள்ள காய்கறி கடைக்காரர்கள், கோயம்பேடு மார்க்கெட்டில் பணியாற்றிய நபர்கள், காவலர்கள், சுகாதார பணியாளர்கள், அத்தியாவசிய ஊழியர்கள் என்று எல்லோருக்கும் கொரோனா சோதனைகளை செய்ய வேண்டும்.


இவர்களுக்கு எல்லாம் கொரோனா அறிகுறி இல்லையென்றாலும் அவர்களுக்கு கொரோனா சோதனைகளை செய்ய வேண்டும். இவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகம் இருக்க வாய்ப்புள்ளது.


முடிவு தெரியும்
முன்பு ஒருவருக்கு கொரோனா வந்தால் அவர் தொடர்பு கொண்ட நபர்கள் எல்லோரும் தனிமைப்படுத்தப்படுவார்கள். அவர்களுக்கு அறிகுறி வரும் வரை காத்திருப்பார்கள். அப்படி அறிகுறி வந்தால் அதன்பின் கொரோனா சோதனையை செய்வார்கள்.


ஆனால் சென்னையில் அப்படி இல்லாமல் கொரோனா வந்த நபர் யாரை எல்லாம் தொடர்பு கொண்டாரோ அவரை எல்லாம் பேதமின்றி சோதனை செய்ய வேண்டும். இப்படி டார்கெட் செய்து சோதனை செய்வதற்கு பெயர்தான் டார்கெட் டெஸ்டிங்.


நல்ல வாய்ப்பு உள்ளது
அதிக மக்கள் தொகை இருக்கும் இடங்களில் எல்லோருக்கும் கொரோனா சோதனைகளை செய்ய முடியாது. மாறாக இப்படி திட்டமிட்டு டார்கெட் செய்து கொரோனா சோதனைகளை செய்ய முடியும். இதன் மூலம் கொரோனா பரவலை பெரிய அளவில் கட்டுப்படுத்த முடியும். அதேபோல் உண்மையில் சென்னையில் எத்தனை பேருக்கு கொரோனா பரவி உள்ளது என்ற தெளிவு இதன் மூலம் கிடைக்கும்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)