ரேஷன் கார்டுகள் அடமானம், அரசாங்க நிவாரணம் அபேஸ்... மீஞ்சூரில் பசியில் வாடும் 40 கிராம மக்கள்

திருவள்ளூவர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட, தேவதானம், காட்டூர், வஞ்சிவாக்கம், உள்ளிட்ட  நாற்பதுக்கும் மேற்பட்ட, கிராமங்களில் வாழும் மக்களின் நிலை இதுதானாம். அன்றாடக் கூலி வேலையையும் மீன் பிடித் தொழிலையும் நம்பி வாழும் இம்மக்கள், தங்களுக்குப் பொருளாதார ரீதியாக நெருக்கடி ஏற்படும் காலங்களில் இப்படி ரேஷன் கார்டை அடமானம் வைப்பது வழக்கமாம்.


``இரண்டாயிரம் முதல் ஐயாயிரம் வரை, ரேஷன் கார்டை வச்சு வட்டிக்குப் பணம் வாங்கலாம்; பத்து ரூபாய் வாங்கினா ஐந்து ரூபாய் வட்டி, கார்டு அவங்ககிட்ட இருக்குற வரைக்கும் மாதமாதம் ரேஷன் பொருள் எல்லாம் அவங்கதான் வாங்கிப்பாங்க.


பணத்தக் கொடுத்து மீட்டுட்டா அப்புறம் நாம வாங்கிக்கலாம்'' என சாதாரணமாகச் சொல்கிறார்கள் அந்த மக்கள்.


கொரோனா ஊரடங்கால் வேலைக்குச் செல்ல முடியாமல், கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துவரும் அந்த மக்களின், ரேஷன் கார்டும் அடமானத்தில் இருப்பதால், அரசாங்கம் கொடுத்த நிவாரணப் பொருள்கையும் வாங்கமுடியாமல் ஒருவேளை சாப்பாட்டுக்குக்கூட வழியில்லாமல் பசியால் தவித்து வருகிறார்கள்.


``நான் மூட்ட தூக்கற வேலை செய்றேன். சில நேரம், மீன் பிடிக்கவும் போவேன். திடீர்னு வேலை இல்லாமப் போயிடும். வீட்டுல பிள்ளைகளுக்கு முடியாமப் போயிடும். ரேஷன்ல அரிசி வாங்கக் கூட கையில காசு இருக்காது.


அப்போ, யார்கிட்ட போய் கையேந்தி நிக்குறது. அடமானம் வைக்குறதுக்கு, நகையெல்லாம் எங்ககிட்ட கிடையாது. வீட்டுல இருக்குறது இந்த ரேஷன் கார்டு மட்டும்தான்'' என்று பேச ஆரம்பித்தவர், திடீரென இடைநிறுத்தி, என் பேரை எதுவும் போட்டுடாதீங்க, நீங்க இப்ப எழுதிட்டுப் போயிடுவீங்க, நாளைக்கு எங்களுக்குப் பணத்தேவைன்னா, அவங்ககிட்டதான் போய் நிக்கணும் என்றவர், தொடர்ந்து பேசினார்        


 ``நான் மூட்ட தூக்கற வேலை செய்றேன். சில நேரம், மீன் பிடிக்கவும் போவேன். திடீர்னு வேலை இல்லாமப் போயிடும். வீட்டுல பிள்ளைகளுக்கு முடியாமப் போயிடும். ரேஷன்ல அரிசி வாங்கக் கூட கையில காசு இருக்காது.


அப்போ, யார்கிட்ட போய் கையேந்தி நிக்குறது. அடமானம் வைக்குறதுக்கு, நகையெல்லாம் எங்ககிட்ட கிடையாது. வீட்டுல இருக்குறது இந்த ரேஷன் கார்டு மட்டும்தான்'' என்று பேச ஆரம்பித்தவர், திடீரென இடைநிறுத்தி, என் பேரை எதுவும் போட்டுடாதீங்க, நீங்க இப்ப எழுதிட்டுப் போயிடுவீங்க, நாளைக்கு எங்களுக்குப் பணத்தேவைன்னா, அவங்ககிட்டதான் போய் நிக்கணும் என்றவர், தொடர்ந்து பேசினார்          ``என் சொந்த ஊர் திருத்துறைப்பூண்டி.


நான் இந்தப் பகுதியில வஞ்சிவாக்கம் எனும் ஊரைத் தத்தெடுத்து, கடந்த ஏழு வருஷமா, சமூக சேவைகள் செஞ்சிட்டு வர்றேன்.


வநூறு பேருக்கும் மேலாக, ரேஷன் கார்டை அடமானம் வைச்சிருக்காங்க. நான் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும்.


`வாங்க, நான் அரசாங்கத்துல பேசி உங்க ரேஷன் கார்டை மீட்டுத் தர்றேன்னு' பலமுறை கேட்டுட்டேன், ஆனால், மக்கள் யாரும் அதற்குத் தயாராக இல்லை.


இப்போ லாக்டௌன் காலத்துல மக்கள் ரொம்பக் கஷ்டப்படுறாங்க.


மக்களோட நிலைமையை எடுத்துச்சொல்லி, `ரேஷன் கார்டுகளைக் கொடுத்துடுங்கன்னு' பணம் கொடுத்த பைனான்சியர்களிடம் கேட்டுப் பார்த்தேன்.


அவங்க, கொடுக்குறதுக்குத் தயாரா இருந்தாலும், மக்கள் வாங்குறதுக்குத் தயாராக இல்லை.            


எங்களுக்கு அடிக்கடி பணம் தேவைப்படும். இப்போ வாங்கிட்டா, அப்ப நாங்க எங்க போறதுன்னு கேள்வி கேட்குறாங்க. அவங்க கேட்குறது நியாயம்தான்.


அவங்க சூழ்நிலை அப்படி. ஆனா, கொடுக்குற பணத்துக்கு வட்டி வாங்குறது மட்டும் இல்லாம, ரேஷன்'ல கொடுக்குற பொருள்களையும் பைனான்சியரே வாங்கி வித்துட்றாங்க. கொரோனாவுக்காக கொடுத்த பணத்தையும் கூட அப்டித்தான் எடுத்துக்கிட்டாங்க.


லாக் டௌன் முடிஞ்சிட்டா கூட அவங்க வேலைக்குப் போய் பார்த்துக்குவாங்க... இப்போ அதுக்கும் வழியில்லாததால ரொம்ப சிரமப்படுறாங்க.


அதுமட்டுமல்ல, இந்த மக்களுக்கு வட்டி இல்லாம பணம் கிடைக்குற மாதிரி அரசாங்கம் ஏற்பாடு செஞ்சா மக்கள் இது போன்ற ஆள்கள்கிட்ட மாட்டிக்க மாட்டாங்க'' என்கிறார் அசோக் பிரியதர்ஷன்.          


சாதாரண மக்களிடம் கெடுபிடி காட்டும், ரேஷன் கடை ஊழியர்கள், பலரின் ரேஷன் கார்டுகளில் ஒருவர் பொருள் வாங்கும்போது எப்படிக் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள் எனத் தெரியவில்லை... இல்லை, இந்தக் குற்றத்தில் அவர்களுக்கும் பங்கிருக்கிறதா... அரசுதான் விசாரித்து மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். மீஞ்சூர் பகுதி மக்களுக்கும் ஒரு நல்வழியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்