நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு..

நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு: பிடிஐ செய்தி


மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக கூறி பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது


மே 3ஆம் தேதியோடு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு


கொரோனா பாதிப்பில்லா பச்சை மற்றும் பாதிப்பு குறைந்த ஆரஞ்ச மண்டலங்களுக்கு மத்திய அரசு தளர்வுகள் அறிவிப்பு


சிவப்பு, பச்சை, ஆரஞ்ச் என வகைப்படுத்தப்பட்டு, ஊரடங்கு தளர்வு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு அமல்படுத்தப்படும்: மத்திய அரசு


இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை, அத்தியாவசிய தேவையின்றி யாரும் வெளியே வரக் கூடாது: மத்திய அரசு


அனைத்து வகை மண்டலங்களிலும், 65 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள் வீட்டை விட்டு வெளியில் வரக் கூடாது: மத்திய அரசு


மருத்துவ தேவையின்றி, முதியவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்கும் கீழ் உள்ள சிறுவர்கள் வெளியில் செல்லக் கூடாது: மத்திய அரசு


கொரோனா பாதிப்புள்ள சிவப்பு மண்டலங்களில், ஏற்கனவே உள்ளதுபோன்று, ஆட்டோ, சைக்கிள் ரிக்சா, டாக்சிகள், பேருந்துகளை இயக்க கூடாது


கொரோனா பாதிப்புள்ள சிவப்பு மண்டலங்களில், சலூன் கடைகள், ஸ்பாக்கள் உள்ளிட்டவற்றை திறக்கத் தடை


சிவப்பு மண்டலம்: அத்தியாவசிய தேவைக்காக செல்வோர் காரில்-2 பேரும்(ஓட்டுநர் உட்பட), பைக்கில் ஒருவர் மட்டுமே பயணிக்க அனுமதி


தனியார் அலுவலகங்கள் 33% பணியாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும்; மற்றவர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)