தமிழக அரசு மீண்டும் ரூ.1000 நிவாரணம் அறிவிப்பு.. யார் யாருக்கு எல்லாம் கிடைக்கும்.. இதோ லிஸ்ட்.

சென்னை: ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளர்களுக்கு தமிழக அரசு மீண்டும் ரூபாய் 1000 நிவாரணத் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது. யார் யாருக்கு எல்லாம் வழங்கப்பட உள்ளது என்பதை இப்போது பார்ப்போம்.


கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க கடந்த மார்ச் மாதம் 24ம்தேதி நள்ளிரவு நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களுக்கு வேலைக்கு செல்லாமல் வீடுகளுக்குள் முடங்கினர்.
விவசாய கூலி தொழிலாளர்கள், சிறு தொழில் செய்பவர்கள், பட்டாசு மற்றும் தீப்பட்டி தொழிலாளர்கள், நெசவாளர்கள், பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் கூலி தொழிலாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், மீனவர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள என விழிப்பு நிலை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
அர்ச்சகர்கள் உள்பட கோயில் ஊழியர்களுக்கு கூடுதலாக ரூ.1000 நிவாரணத் தொகை.. முதல்வர் அறிவிப்பு


விலையில்லா பொருட்கள்
இதையடுத்து தமிழக அரசு அரிசி அட்டை தார்கள் அனைவருக்கும் ரூ.1000 நிவாரணம் அளித்து உதவியது. அத்துடன் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, சீனி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைம் விலை இல்லாமல் அளித்தது. தொடர்ந்து மே மாதத்திற்கு உணவு பொருட்களை விலைஇல்லாமல் அளித்தது. தற்போது ஜுன் மாதத்திற்கும் விலை இல்லாமல் உணவு பொருட்களை விநியோக்க முடிவு செய்துள்ளது.


ரேஷன் அடைக்கு
இந்நிலையில் ரேஷன் அட்டை தார்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்ட நிலையில் அமைப்பு சாரா தொழிலாளர்கள், மீனவர்கள் நலவாரியத்ததில் பதிவு செய்தவர்கள், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள், வணிகர்கள் நலவாரியத்தில் பதிவு செய்தவர்கள், பழங்குடியினர் நலவாரியத்தில் பதிவு செய்தவர்கள், நறிகுறவர்கள், பூசாரிகள், காதி தொழிலாளர்கள், திருநங்கைகள், சலவை தொழிலாளர்கள், உள்பட பல்வேறு 14 வகையான தொழிலாளர்களுக்கு ரூ.1000 நிவாரணம் அறிவித்து வழங்கியது.


தமிழக அரசு நிவாரணம்
இந்நிலையில் தமிழக அரசு மீண்டும் 14 வகையான பல்வேறு நலவாரிய தொழிலாளர்களுக்கு மீண்டும் ரூ.1000 நிவாரணத்தை அறிவித்துள்ளது. இதன்படி மீனவர்கள் நலவாரியத்தில் பதிவு செய்த 485000 பேருக்கும், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் நலவாரியத்தில் உள்ள 59100 பேருக்கும், பழங்குடியினர் நலவாரியத்தில் உள்ள 46979 பேருக்கும், நாட்டுப்புற கிராமிய கலைக்குழுவினர் 37385 பேருக்கும், பூசாரிகள் நலவாரியத்தில் உள்ள 33 627பேருக்கும் ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


நலவாரியத்தினருக்கு
தூய்மை பணி நலவாரியத்தினர் 30780 பேருக்கும், திரைக்கலைஞர்கள் நலவரியரித்தினர் 21679 பேருக்கும், நரிக்குறவர் நலவாரியத்தில் உள்ள 12670 பேருக்கும், காதி நலவாரியத்தில் உள்ள 9042 நெசவாளர்களுக்கும், திருநங்கைகள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 6553 பேருக்கும், சலவை தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 3826 பேருக்கும், முஸ்லிம் உல்மாக்கள் நலவாரியத்தில் உள்ள 14622 பேருக்கும், சில குறிப்பிட்ட பழங்குடியினர் நலவாரியத்தினர் 33687 பேருக்கும் (de-notified communities welfare board) ரூ. 1000 நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


எவ்வளவு பணம் ஒதுக்கீடு
மொத்தம் பல்வேறு நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 839950 பேருக்கு தலா ரூ.1000 நிவாரணம் வழங்குதற்கு தமிழக அரசு ரூ. 83,99,50,000 ரூபாய் ஒதுக்கி உள்ளது. மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இந்த நிவாரணத்தை அறிவித்துள்ளது. இதேபோல் மற்ற தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு