லாக்டவுனை நீட்டித்தால்.. இந்தியாவில் ஏற்பட போகும் விளைவுகள்.. ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் பெரும் கவலை.

டெல்லி: இந்தியாவில் லாக்டவுன் நீண்ட காலத்திற்கு அமல்படுத்தப்பட்டால் அது பல லட்சம் மக்களை வறுமையில் தள்ளக்கூடும் என முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் துவ்வூரி சுப்பாராவ் எச்சரித்துள்ளார்.


சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனா உயிரிழப்புகளை மட்டும் ஏற்படுத்திவிடவில்லை.


உயிரிழப்புகளோடு சேர்த்து பொருளாதார பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இதுவரை 26500க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் 800க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.


தினமும் 1500க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. உயிரிழப்பும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால் மே 3ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.
முக்கிய அறிவிப்பு.. தமிழகத்தில் சொத்து வரி, குடிநீர் வரி செலுத்த 3 மாதம் அவகாசம்!


சுப்பாராவ் பேச்சு
இந்த நிலையில், மந்தன் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த "கொரோனாவுக்கு பிந்தைய உலகத்திற்கான பாடங்கள்" என்கிற இணையவழி கூட்டத்தில் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பாராவ் கலந்து கொண்டார்.


அதில் அவர் பேசுகையில், "பெரும்பாலான பொருளாதார ஆய்வாளர்கள் இந்த ஆண்டு இந்தியாவின் வளர்ச்சி எதிர்மறையாகச் போகும் அல்லது வளர்ச்சி சுருங்கிவிடும் என எண்ணுகிறார்கள்.


பொருளாதார வளர்ச்சி
ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்தியாவின் வளர்ச்சி சரிந்துவிட்டது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.


ஐந்து சதவிகிதமாக இருந்த கடந்த ஆண்டின் வளர்ச்சியானது தற்போது முற்றிலுமாக நின்றுவிட்டது. இந்த ஆண்டு நாம் நெகட்டிவ் வளர்ச்சி அல்லது பூஜ்ஜியம் வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கப்போகிறோம்.


வறுமையில் தள்ளப்படுவர்
இந்தியா ஏழ்மை நாடு என்பதால், இந்த நெருக்கடிக்குப் பிறகு நம்முடைய செயல்பாடு சிறப்பானதாக இருந்தாலும் அது பலனளிக்காது.


தற்போது நடைமுறையில் இருக்கும் லாக்டவுன் நடவடிக்கை நீட்டிக்கப்பட்டால் தேசத்தில் உள்ள பல லட்சம் மக்கள் வாழ்வின் விளிம்புகளுக்கு தள்ளப்படுவார்கள்.


பொருளதாரம் எப்படி
ஆனால், ஆய்வாளர்கள் கணித்தபடி நாட்டில் ‘V' வடிவ மீட்பு இருக்கும். இந்த மீட்சி மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகச் சிறந்தது.


சூறாவளி, நிலநடுக்கம் என இயற்கை பேரிடர்களால் நமது பொருளாதார அல்லது உற்பத்தி கட்டமைப்புகள் சேதம் ஆகவில்லை. எனவே இயல்புநிலை திரும்பியதும் மக்கள் தங்கள் வேலைகளைச் செய்யத் தயாராக உள்ளார்கள். 


நாட்டின் பொருளாதார மீட்சியானது எந்த வேகத்தில் இறங்கியதோ அதே வேகத்தில் மேலெழும். இந்த வகையிலான மீட்பு இந்தியாவுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது.


மைனஸ் நிலைக்கு
2008ல் சர்வதேச அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது இந்தியா அதிலிருந்து மிக வேகமாக மீண்டது. தற்போது சர்வதேச நாணய நிதியம் இந்தியாவின் நடப்பு ஆண்டின் வளர்ச்சி 1.9 என்கிற அளவில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.


ஆனால், பல ஆய்வாளர்களின் கணிப்பு என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வளர்ச்சி எதிர்மறையாக இருக்கக்கூடும் என்று கணித்துள்ளார்கள்" இவ்வாறு சுப்பாராவ் கூறினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)