லாக்டவுனில் இருந்து எப்போது வெளிவருவது.. பிரதமர் மோடி முதல்வர்களுடன் இன்று ஆலோசனை

டெல்லி:கொரோனா வைரஸ் தொற்று எதிரான போராட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கள்கிழமை) காலை வீடியோ கான்பிரன்சிங் முறையில் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.


இந்த ஆலோனையின் போது லாக்டவுனில் இருந்து எப்போது வெளிவருவது அல்லது ஓரளவு தளர்வுகள் வழங்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காக மார்ச் 24ம் தேதி நள்ளிரவு முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்கள் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக கடந்த மார்ச் 24ம் தேதி இரவு திடீரென பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.


அதன்பிறகு ஏப்ரல் 14ம் தேதி மீண்டும் நாட்டு மக்கள் மத்தியில் தோன்றி பேசிய பிரதமர் மோடி, ஊரடங்கை மே 3 வரை 19 நாட்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்தார்.
ஆந்திராவில் ஆளுநர் மாளிகையில் 4 பேருக்கு கொரோனா உறுதி.. ஆளுநருக்கும் விரைவில் பரிசோதனை


ஊரங்கு தளர்வு
எனினும் சிவப்பு மண்டலம் அல்லாத பகுதிகள், கொரோனாவால் பாதிக்கப்படாத பகுதிகள் ஆகியவற்றில் ஏப்ரல் 20ம் தேதி முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவித்தார்.


இதன்படி விவசாய கூலி வேலை செய்வோர், பிளம்பர், கட்டுமான பணிகள் உள்பட பல்வேறு பணிகள் செய்வோருககு விலக்கு அளிக்கப்பட்டது. இதேபோல் சில வகை தொழிற்சாலைகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டது.


கடைகளுக்கு அனுமதி
இதன்படி மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பல்வேறு துறைகளில் படிப்படியாக தளர்வு அளித்து வருகின்றன.


பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. கிராமப்புறங்களில், ஷாப்பிங் மால்களில் உள்ள கடைகளைத் தவிர அனைத்து கடைகளும் திறக்க அனுமதிக்கப்படுகின்றன.


லாக்டவுன் நீட்டிப்பா
இந்நிலையில பிரதமர் நரேந்திர மோடி கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் பரவிய பின்னர் மாநில முதல்வர்களுடன் மூன்றாவது முறையாக பிரதமர் நாளை வீடியோ கான்பிரன்சிங் முறையில் பேச உள்ளார்.


அப்பேதோ பல்வேறு மாநில முதல்வர்கள் கொரோனா தடுப்புக்காக நிதி சார்ந் கோரிக்கைகள் முன்வைப்பார்கள் என தெரிகிறது. இதேபோல் சில மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்த வாய்ப்பு உள்ளது. பிரதமர் மோடி முதல்வர்களுடன் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணி மற்றும் ஊரடங்கில் இருந்து வெளிவருவதற்காக உத்திகள் ஆகியவை குறித்து ஆலோசிப்பார் என தெரிகிறது.


எச்சரிக்கையாக இருங்கள்
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மாதாந்திர 'மான் கி பாத்' வானொலி உரையில், மோடி பேசம் போது நாடு ஒரு போருக்கு நடுவில் இருக்கிறது. மக்கள் தொடர்ந்து கவனமாக இருக்க வேண்டும் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


அதிக தன்னம்பிக்கை கொள்ள வேண்டாம் என்று நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். கொரோனா வைரஸ் உங்கள் நகரம், கிராமம், தெரு அல்லது அலுவலகத்தை இன்னும் அடையவில்லை என்றால், அது இப்போது எட்டப் போவதில்லை என்று நீங்கள் நினைக்கக்கூடாது.


இதுபோன்ற தவறை ஒருபோதும் செய்யாதீர்கள். இந்த விஷயத்தில் உலகின் அனுபவம் நமக்கு நிறைய சொல்கிறது, "என்று அவர் கூறினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு