தமிழகத்துக்கு ராணுவம் வராது: காவல் துறை அதிகாரிகள் தகவல்..

தமிழகத்தில் போலீஸாரின் கண்காணிப்பையும் மீறி பலர் தேவையின்றி வெளியில் திரிகின்றனர்.


இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்ற ஏப்ரல்முதல் வாரத்தில் தமிழகத்துக்கு துணை ராணுவப்படை வரவுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது. மேலும், அவசரநிலை பிறப்பிக்கப்படும் என்றும் பல்வேறு விதமான தகவல்கள் வருகின்றன.


இதுகுறித்து தமிழக காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தமிழகத்துக்கு ராணுவத்தை அழைக்கும் சூழ்நிலை இல்லை. சமூக வலைதள வீரர்கள்தான் தேவையில்லாத தகவல்களை பரவச்செய்து, பொதுமக்களை பீதி அடைய வைக்கின்றனர்.


இதுபோன்ற தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது காவல்துறை கைது நடவடிக்கை எடுக்கும். துணை ராணுவம் தமிழகம்வர இருப்பதாக வெளிவரும் தகவல் களில் உண்மை இல்லை” என்றனர்.