இன்று முதல்வீடு வீடாக சென்று கொரோனா பாதிப்பு குறித்த ஆய்வு.

சென்னை நகரில் இன்று முதல் வீடு வீடாக சென்று கொரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மாநகராட்சி அலுவலர்கள் திட்டமிட்டுள்ளனர்.


நகரின் மொத்தமுள்ள 200 வார்டுகளிலும் காய்ச்சல், சளி, மூச்சுத் திணறல் பாதிப்புடையவர்களைக் கண்டறிந்து தேவைப்படுபவர்களுக்கு பரிசோதனைகள் மேற்கொள்ள இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.


வெளிநாடுகளுக்கு சென்று திரும்பியவர்களுக்கு நோய்த் தொற்று இருப்பின் அது அவர்கள் குடும்பத்தினரை பாதிக்காமல் இருக்கவும் அக்கம் பக்கம் மக்களை பாதுகாக்க வைத்திருக்கவும் அவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


இப்பணிக்காக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வ, தொண்டு உள்ளம் கொண்டவர்களின் உதவியை நாடப்போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


மக்களிடமிருந்து பயண விவரங்களை சேகரிப்பதன் மூலமும் நோயின் பரவலுக்கான மையக்கூறுகளை அடையாளம் காண முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.