கேட்பாரற்று கிடக்கும் கொரோனா நோயாளிகள் சடலங்கள் ...

அமெரிக்காவில்  கொரோனாவில் இறந்தவர்களின் சடலங்கள் கேட்பாரற்று கிடக்கும் புகைப்படங்கள் வெளியாயுள்ளன.    


உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.


இதில் மற்ற நாடுகளைக் காட்டிலும் அமெரிக்கா அதிகமாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,50,000 ஐ தாண்டியுள்ளது எனவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23,529 ஆக உள்ளது எனவும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவிக்கின்றன.  


அமெரிக்காவில் நேற்று இரவு 8.30 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 1509 பேர் இறந்துள்ளதாக  ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. இதற்கு முந்தைய 24 மணி நேரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,514 ஆக இருந்தது.  


இந்நிலையில், அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்திலுள்ள மருத்துவமனைகளில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் உடல்கள் கேட்பாரற்று கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.


டெட்ராய்டு நகரிலுள்ள மருத்துவமனையில் காலியாக இருக்கும் குளிரூட்டப்பட்ட அறைகளில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் உடல் பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டு தரையில் வைக்கப்பட்டுள்ளன.


ஏப்ரல் முதல் வாரத்திலிருந்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 100 முதல் 130 நபர்களுக்குச் சிகிச்சை அளித்துவருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.