மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரோனா நோயாளி; கட்டிப்பிடித்து விடுவேன் என மிரட்டல்...

சென்னை : மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரோனா நோயாளி, பிடிக்க சென்ற போலீசாரை, 'கட்டிப்பிடித்து விடுவேன்' என மிரட்டியதால், பரபரப்பு ஏற்பட்டது.


சென்னை, புளியந்தோப்பு, சிவராஜபுரத்தைச் சேர்ந்த, 54 வயது நபர் அயனாவரம், இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், 'வார்டு பாயாக' பணிபுரிந்து வந்தார்.


இவருக்கு, 24ம் தேதி, கொரோனா வைரஸ் தொற்று பரவி இருப்பது தெரிய வந்தது. இதனால் சுகாதாரத் துறை அதிகாரிகள் அவரை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வந்தனர்