வங்கிகள் வழக்கம்போல் முழுநேரம் செயல்படும்- பரிவர்த்தனை நேரம் மாற்றம்..

வங்கிகளின் பரிவர்த்தனை நேரம் மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. அவை பழையபடி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மக்கள் கூடும் இடங்களில்கூட்ட நெரிசலைத் தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


இதையடுத்து, வங்கிகளில் பரிவர்த்தனை நேரம் காலை 10 மணிமுதல் பிற்பகல் 2 மணியாக குறைக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் வங்கிகள் பழையபடி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக, மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், மத்திய அரசு வழங்கும் நிவாரண நிதியை பயனாளிகள் பெற வங்கிகள் வழக்கமான நேரத்தில் செயல்பட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.


இதை ஏற்று வங்கிகள் பழையபடி காலை 10 மணி முதல் மாலை4 மணி வரை செயல்படும். மேலும்,வைரஸ் பரவுவதை தடுக்க வங்கியில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதோடு, வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு