கோடை வெயிலுக்கு குடை, கொரோனாவுக்கு விடை! ; திருப்பூர் கலெக்டர் விழிப்புணர்வு..

திருப்பூர் : கோடை வெயிலில் இருந்து தப்ப, வீட்டில் இருந்து வெளியே வரும்போது குடை பிடியுங்கள்; இது, கொரோனா பரவலுக்கு விடை கொடுக்கும் என, திருப்பூர் மாவட்ட நிர்வாகம், நுாதனமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.


'சமூக வலைதளங்கள் வழியாக, மக்களுக்கு தகவல் பரிமாறுவது, திருப்பூர் கலெக்டரின் வழக்கம். அதன்படி, நேற்று முன்தினம் இரவு, 'குடை பிடிங்க... கொரோனாவை விரட்டுங்க' என கலெக்டர் பேசும், 'பஞ்ச் டயலாக்' வீடியோ வெளியானது.


கலெக்டர் விஜய கார்த்திகேயன் கூறுகையில், ''வீட்டில் இருந்து, அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டும், வெளியே வர வேண்டும். வீட்டுக்குள்ளும், வீட்டில் இருந்து வரும் போதும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கோடை வெயில் அதிகமாகிவிட்டதால், வெளியே வரும் போது குடை பிடித்து வரவேண்டும்; குடை பிடித்துள்ள நபர்கள், அருகருகே செல்ல முடியாது.


அதனால், சமூக இடைவெளி சரியாக பின்பற்றப்படும். கோடை வெப்பத்துக்காக குடை பிடித்தால், கொரோனா பரவலையும் தடுக்க முடியும்,'' என்றார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்