தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் வெளவால்களுக்கு கொரோனா தொற்று.!

 


இந்தியாவில், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில், இரண்டு வெவ்வேறு வகையான வெளவால்களுக்கு கொரோனா தொற்று இருப்பது, கண்டறியப்பட்டுள்ளதாக, ICMR என சுருங்க அழைக்கப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.


வெளவால், பறக்கவல்ல முதுகெலும்புள்ள பாலூட்டி ஆகும். இவற்றில், பழந்திண்ணி வெளவால்கள் மூலம், கொரோனா பரவியிருக்கலாம் என ஐயம் எழுந்தது. இதையடுத்து, கர்நாடகா, குஜராத், ஒடிசா, பஞ்சாப், தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில், வெளவால்களுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது.


இதில், தமிழ்நாடு, புதுச்சேரி. கேரளா, இமாச்சல பிரதேசம், உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள வெளவால்களுக்கு, கொரோனா பெருந்தொற்று இருப்பதை கண்டறிந்திருப்பதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு