கண்டக்டர், டிரைவர்களுக்கு தயாரா இருங்க! வந்தாச்சு வாய்மொழி உத்தரவு

கோவை:ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளதால், அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரியும் டிரைவர், கண்டக்டர்கள் மே 4ல், பணிக்கு வர தயாராக இருக்குமாறு, போக்குவரத்துக்கழக உயர் அதிகாரிகள், 'அலர்ட்' அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.


ஆகவே, அரசின் விதிமுறைகளை பின்பற்றி, விழிப்புடன் வெளியே இறங்க தயாராவோம்!தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக்கழக கோவை கோட்டத்தில், 2,900 அரசு பஸ்கள் உள்ளன.


கோவை நகரில் மட்டும், 740 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
ஓட்டம் இல்லாவிட்டாலும், இந்த பஸ்களுக்கான பராமரிப்பு மற்றும் பழுது சரிசெய்யும் பணிகள், 44 பஸ் டெப்போக்களில் நடந்து வருகின்றன.


பஸ்ஸில்உள்ள பழுதுகள் சரிசெய்யப்பட்டு, டிப்போவில் சோதனை ஓட்டத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. பழுதுகள் நீக்கம் செய்யப்பட்ட பஸ்ஸின் முகப்பில், பச்சை கார்டு தொங்கவிடப்பட்டு, தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில், மீண்டும் பஸ்களை இயக்க தயாராக இருக்குமாறு, டெப்பொ மேலாளர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு, அரசு போக்குவரத்துக்கழககோவை கோட்ட உயர் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.


உத்தரவு குறித்து, போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:மே 4ல் பஸ்களை இயக்க தயாராக இருக்கவும், தொழிலாளர்களுக்கு முன்னதாகவே தகவல் தெரிவித்து, தயார் நிலையில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


சூழலுக்கு தகுந்தாற் போல் உத்தரவுகள் மாற்றப்படலாம்.பஸ்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், சானிடைசர், கையுறை ஆகியவற்றை தயார் நிலையில் வைக்க உத்தரவிட்டுள்ளனர்.


அதன் படி, மருந்துப் பொருட்களையும் தமிழ்நாடு மருந்துப்பொருள் வாணிபக்கிடங்கில் வாங்கி, அனைத்து டெப்போக்களுக்கும் சப்ளை செய்துள்ளோம்.அவ்வாறு இயக்கப்பட்டால், முதற்கட்டமாக, 40 முதல் 60 சதவீதம் வரையிலான பஸ்கள், முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும்.


முதலில் உள்ளூர் சேவை மட்டுமே துவங்கும், கேரளா, கர்நாடகா சேவைகள் துவங்கப்படாது. அதேபோல் குறிப்பிட்ட வெளி மாவட்ட பஸ்கள் மட்டுமே இயக்கப்படும்.இவ்வாறு, அந்த அதிகாரி தெரிவித்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)