பள்ளி வாசல்களில் நோன்பு கஞ்சியை வழங்குவதில்லை என இஸ்லாமிய அமைப்புகள் முடிவு

ரமலான் மாதம் அடுத்த வாரம் தொடங்கும் நிலையில் நோன்பு கஞ்சியை பள்ளி வாசல்களில் வழங்குவதில்லை என இஸ்லாமிய அமைப்புகள் முடிவு செய்துள்ளன. 


தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கொரோனா குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் பேசும்போது தமிழகத்தில் இன்று புதிதாக 25 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.


தமிழகத்தில் அரசின் நடவடிக்கையால் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளதாகவும், அடுத்தடுத்த நாட்களில் கொரோனா வைரஸ் முற்றிலும் குறைந்து, வரும் 4 அல்லது 5 நாட்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு புதிதாக இல்லை என்ற நிலை உருவாகும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து பேசிய அவர், 65 லட்சம் மூன்றடுக்கு முகக்கவசங்கள், 3 லட்சம் ‘என்95’ முகக்கவசங்கள் உள்ளதாகவும் இந்தியாவில் எந்த மாநிலத்திற்கும் இன்னும் ரேபிட் கிட் வரவில்லை என்றும் தெரிவித்தார். தமிழகத்திற்குத் தேவையான நிதியை மத்திய அரசிடம் கேட்டுள்ளதாகவும் கூறினார்.


மேலும்தமிழகத்தில்கரோனாவைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 118 லிருந்து 180 ஆக உயர்ந்திருப்பதாகக் கூறினார். கொரோனா வைரஸில் கூட திமுக அரசியல் செய்வதாகவும், அது கவலை அளிப்பதாகவும் தெரிவித்துக்கொண்டார்.


இதனிடையே ரமலான் மாதம் அடுத்த வாரம் தொடங்கும் நிலையில் நோன்பு கஞ்சியை பள்ளி வாசல்களில் வழங்குவதில்லை என இஸ்லாமிய அமைப்புகள் முடிவு செய்துள்ளன.


இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பள்ளி வாசல்களுக்கு அரசு சார்பில் அளிக்கப்படும் பச்சரிசி வரும் 19ஆம் தேதிக்குள் அளிக்கப்பட்டுவிடும் என்றார்.