நெஞ்சை நெகிழச் செய்த கொரோனா பிடியில் இருந்து மீண்ட தாயின் பாசம்...
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கொரோனா வைரசால் கோமா நிலைக்கு போன தாய் அதிலிருந்து மீண்டு தான் பெற்றெடுத்த குழந்தையை முதன்முறையாக சந்தித்த நிகழ்வு நெஞ்சை நெகிழச் செய்வதாய் இருந்தது.
லாங் தீவைச் சேர்ந்தவர் யானிரா சோரியானோ. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு கடந்த 3 வாரத்திற்கு முன்பு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சிசேரியன் மூலம் ஆண் குழந்தை பெற்ற அந்த பெண் கோமா நிலையில் 2வாரங்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பூரண குணம் அடைந்த யானிரா நேற்று மருத்துவமனையில் இருந்து சக்கரநாற்காலி மூலம் வீடு திரும்பினார்.
அப்போது அங்கிருந்தவர்கள் அனைவரும் கைதட்டி அன்புடன் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தான் பெற்றெடுத்த ஆண் குழந்தையையும் முதன்முதலாக அவர் கொஞ்சி மகிழ்ந்தார்.