இந்து பெண்ணின் உடலைச் சுமந்த இஸ்லாமிய இளைஞர்கள்...!


மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் அமைந்த இந்தச் செயலை, அம்மாநில முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் பாராட்டியுள்ளார்.


மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், இந்து பெண்ணின் உடலை, இஸ்லாமிய இளைஞர்கள் சுமந்து சென்ற நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நீண்ட நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட 65 வயது மூதாட்டி ஒருவர் நேற்று உயிரிழந்தார். அவரின் மகன்கள் ஊரடங்கு காரணமாக வெளியூரில் இருந்து வர முடியாத நிலை இருந்துள்ளது.


இதனைதொடர்ந்து அவரது உடலை மயானம் வரை கொண்டு செல்வதற்கு எவ்வித போக்குவரத்தும் இல்லாமல் போனதால், அப்பகுதி இஸ்லாமிய இளைஞர்கள் சிலர், இரண்டரை கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பெண்ணின் உடலை சுமந்து சென்றனர்.


மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் அமைந்த இந்தச் செயலை, அம்மாநில முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் பாராட்டியுள்ளார்