நோய் அறிகுறி இல்லாதவர்களும் மாஸ்க் அணிய வேண்டும் - சுகாதார அமைச்சகம்

கொரோனா தொற்றை தடுக்கும் நோக்கில், வெளியே செல்லும் அனைவரும் வீட்டிலேயே தயாரிக்கப்படும் மாஸ்க்குகளை அணிந்து கொள்ளுமாறு சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.


கொரோனா அறிகுறி சந்தேகம் இல்லாதவர்கள் அல்லது சுவாசப் பிரச்சனை எதுவும் இல்லாதவர்கள் வெளியே செல்ல நேர்ந்தால், சுத்தமான துணியைக் கொண்டு மூக்கு, வாய் உள்ளிட்டவற்றை மறைத்துக் கொள்ள வேண்டும். இதனால் கொரோனா சமூகத் தொற்றாக மாறுவதை தடுக்கலாம் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


அதே சமயம் கொரோனா அறிகுறி உள்ளவர்கள், கொரோனா நோயாளிகளை கவனித்துக் கொள்பவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் இது போன்ற முக உறைகளை அணிந்து கொள்ளக் கூடாது. அவர்கள் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மாஸ்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


வீட்டில்ஒரே முக உறையை பயன்படுத்தாமல் தனித்தனி துணிகளை உறையாக பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


முக உறை தரித்தால் தொற்றை குறைக்கலாம் என அமெரிக்க ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளதை அடுத்து நமது நாட்டு மக்களுக்கும் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது