அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுகிறோம் என அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை தமிழக முதல்வருக்கு கோரிக்கை

தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை நிபுணர்குழு வழிகாட்டுதல்படி அமல்படுத்த வேண்டும். 
பூரண மதுவிலக்கு நடவடிக்கையானது நம் மக்களுக்கும்‌, பெண்களுக்கும், வருங்கால தலைமுறையினருக்கும் நலன் காக்கும் வகையில் அமையும்.


எனவே  பொதுமக்கள் நலன் காக்கும் வண்ணம்  அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென பெண் வழக்கறிஞர்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை


தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமுலில் இல்லாததால் மக்களிடையே குடிப்பழக்கம் பெருகி அவர்களது உடல் நலமும் வாழ்க்கையும் சீர்கெடுவதால் மது விலக்கை அமல்படடுத்தக் கோரி பல அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி  வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தற்போது நாடு முழுவதும் கொரொனா என்ற ஆட்கொல்லி வைரஸை சமூக தொற்றாகாமல் தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பொது ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து பல்வேறு சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.


ஊரடங்கு உத்தரவின் பொழுது தமிழகத்தில் அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 கொரொனா ஊரடங்கின் போது மதுக்கடைகள் மூடியே உள்ளன. மதுக்கடைகள் மூடப்பட்டதால் மது பிரியர்கள் மனநோய்க்கோ,உடல் தளர்ச்சிக்கோ, மனத்தளர்ச்சிக்கோ, தற்கொலைக்கோ ஆளாகவில்லை. அவ்வாறு எந்த செய்திக்குறிப்பும் இல்லை. 


எனவே தமிழ்நாட்டில் பூரண மது விலக்கை நிபுணர்குழு வழிகாட்டுதல்படி  அமல்படுத்த வேண்டுகிறோம். 
பூரண மதுவிலக்கு நடவடிக்கையானது நம் மக்களுக்கும்‌, பெண்களுக்கும், வருங்கால தலைமுறையினருக்கும் நலன் காக்கும் வகையில் அமையும்.


எனவே  பொதுமக்கள் நலன் காக்கும் வண்ணம்  அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுகிறோம் என பெற்றோர் அறக்கட்டளை
தி.ஜெயந்திராணி
அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை
எம்.சித்ரா உள்ளிட்ட பெண்
வழக்கறிஞர்கள்
தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்கள்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்