கொரோனா பீதி காரணமாக பழங்களை யாரும் வாங்க முன்வராததால் அவைகள் அனைத்தும் செடிகளிலேயே அழுகி வீணாகி வருகிறது.

மாமல்லபுரம்: கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.


இதன்காரணமாக பிரபல சுற்றுலாத் தலமான மாமல்லபுரம் கடற்கரை கோயில் வெறிச்சோடி காணப்படுகிறது.


மாமல்லபுரம் அடுத்த மணமை, தர்காஸ், வடகடம்பாடி, கடம்பாடி மற்றும் காரணை உள்ளிட்ட பல்வேறு கிராமப் பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள், தர்பூசணி பயிரிட்டுள்ளனர்.


ஒருசிலர் வட்டிக்கு கடன் வாங்கியும் நகைகளை அடகு வைத்தும் தர்பூசணிகளை பயிரிட்டுள்ளனர். தற்போது தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு தயார்நிலையில் உள்ளன.


ஆனால் கொரோனா பீதி காரணமாக பழங்களை யாரும் வாங்க முன்வராததால் அவைகள் அனைத்தும் செடிகளிலேயே  அழுகி வீணாகி வருகிறது.


இதனால் போட்ட பணத்தை எடுக்க முடியாமல் விவசாயிகள் தவித்து‘ வருகின்றனர். இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், ‘’ கடன் வாங்கி தர்பூசணி பயிரிட்டோம்.


நல்ல விளைச்சல் கண்டு அறுவடைக்கு தயாராக இருந்தபோது கொரோனா பாதிப்பு காரணமாக விற்பனை அடியோடு பாதிக்கப்பட்டுவிட்டது. எனவே, எங்களுக்கு அரசு நிவாரணை உதவித்தொகை வழங்க வேண்டும்’ என்றனர்.