மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் அமெரிக்கன் இந்தியன் பவுண்டேஷன்
கொரோனாவால் பாதிக்கப்படும் ஏழை, அடித்தட்டு மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் அமெரிக்கன் இந்தியன் பவுண்டேஷன்
கொரோனா தொற்று காரணமாக, இந்தியாவில் சமூக, பொருளாதார பாதிப்புக்கு ஆளாகி உள்ள அடித்தட்டு மக்களுக்கு உதவும் பணிகளை தன்னார்வ அமைப்பான அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன் (American Indian Foundation) துவக்கி உள்ளது.
கடந்த 2001 ல் ஏற்பட்ட குஜாராத் பூகம்பத்திற்குப் பிறகு துவக்கப்பட்ட இந்த அமைப்பு இந்தியாவின் பல பகுதிகளில் பேரிடர் ஏற்படும் போதெல்லாம் உதவிக்கரம் நீட்டி வருகிறது.
கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் இந்திய அரசுக்கு உறுதுணையாக இந்த அமைப்பின் மருத்துவர்கள், ஆசிரியர்கள், சமூக ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட தன்னார்வலர்கள் செயலாற்றுவார்கள் என பவுண்டேஷனின் தலைமை செயல் அலுவலர் நிஷாந்த் பாண்டே தெரிவித்துள்ளார்,
வேலையிழப்பு, குழந்தைகளுக்கான கல்வி முடக்கம், சமூகத்தில் இருந்து தனிமைப்படுதல் உள்ளிட்ட பல பிரச்சனைகளுக்கு உரிய வகையில் உதவி செய்யப்படும் என்றும் உறுதி அளித்துள்ளது.