நெல்கொள்முதலுக்கு விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கிய ஊழியர் பணி இடைநீக்கம்

கடலூரில் நெல்கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கிய ஊழியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டையில் அடுத்த மாத்தூர் கிராமத்தில் விவசாயிகளின் சம்பா சாகுபடி நெல்லை கொள்முதல் செய்த அரசால் தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.


இங்கு விவசாயிகளின் விளை பொருட்களை சன்ன ரக நெல் கிலோ ஒன்று 19. 5 பைசாவும் மோட்டா ரகம் 18 ரூபாய் 65 பைசாவும் கொள்முதல் செய்ய 40 கிலோ மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் லஞ்சம் பெற்று கொள்முதல் செய்வதாக புகார்கள் எழுந்தது. 


மேலும் 40 கிலோ மூட்டை 3 கிலோ எடையில் மோசடி செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன.


இது சம்பந்தமாக லஞ்சம் பெறும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக புதியதலைமுறை செய்தி வெளியிட்டது.


இந்நிலையில், புதிய தலைமுறையில் செய்தி வெளியான நிலையில் லஞ்சம் வாங்கிய ஊழியரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


சென்னை தலைமை செயலகத்தில் வேளாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் ககன் தீப் சிங், உணவுத்துறை செயலாளர் தயானந்த் கட்டாரியா அளித்த பேட்டியின் போது இந்த தகவலை தெரிவித்தனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு