காகிதம் ராஜன் அமைப்பின் அறிக்கை!

*🦑சென்னையில் பத்திரிகையாளர் இருவருக்கு கொரோனா தொற்று*


*🚩காகிதம் அமைப்பின் அறிக்கை*


*▪️வெட்டியானுக்கு சுடுகாட்டிற்கு பிணம் வந்தால் தான் பணம்*


*▪️நிமிடத்துக்கு நிமிடம் பரப்பு செய்தி வந்தால் தான் ஊடக முதலாளிக்கு பணம்*


*▪️எவன் வீட்டில் பிணம் விழுந்தால் என்ன..எனக்கு தேவை பணம் இது தான் வெட்டியானுக்கும்..ஊடக முதலாளிக்கும்  உள்ள ஒற்றுமை*


▪️ *மழை,வெள்ளம், புயல் காலம் போல நிமிடத்துக்கு நிமிடம் செய்தியாளர்கள் கூட்டம் நடத்தும் போக்கை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தோம்*


*▪️கும்பல் கும்பலாக செய்தியாளர்களையும் ஒளிப்பதிவாளர்களையும் நிற்க வைத்து பேட்டி கொடுப்பவர்களுக்கும் கொரோனா தொற்றும் என எடுத்துரைத்தோம்*


*▪️எவ்வித பணி உத்தரவாதம் இல்லாத வாழ்வாதாரமற்ற செய்தியாளர்களை வீதிக்கு..வீதி அழைத்து செல்லாதீர்கள் என எச்சரிக்கை விடுத்தோம்*


*▪️தலைமைச்செயலக செய்தியாளார் அறை உட்பட மாநிலத்தில் உள்ள மாநகராட்சி, காவல்துறை அலுவலகம்,மாவட்ட ஆட்சியாளர் வளாகத்தில் உள்ள செய்தியாளர் அறைகளை நிலமை சீராகும் வரை பூட்ட சொன்னோம்*


*▪️அரசு தரப்பு மற்றும் கட்சி செய்திகளை,செய்திப் படங்களை,வீடியோக்களை மெயில் மூலமாக வாட்ஸ் அப் மூலமாக அனுப்புங்கள் என்று சொன்னோம்*


*▪️எவரும் செவி மடுக்கவில்லை*


*▪️கூரைப்பள்ளிகளை தடை செய்ய கும்பகோணத்தில் பள்ளி சிறார்கள் தீயில் கருக வேண்டும்*


▪️ *பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய சேலையூர் சிறுமி பேருந்தின் ஓட்டை வழியே விழுந்து பெற்றோர் முன் கொடூரமாக சாக வேண்டும்*


*▪️சாலைகளில் கட்டவுட் கட்டுவதை தடை செய்ய பள்ளிக்கரணையில் ஒரு சுபஸ்ரீ சாக வேண்டும்*


*அதேபோல் பத்திரிகையாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க பத்திரிகையாளர் எவராவது ஒருவர் செத்தால் தான் அரசு நடவடிக்கை எடுக்கும்*


*அப்படி சாகப்போவது நானாகவும் இருக்கலாம்..நீங்களாகவும் இருக்கலாம்*


*நமக்கு நாம் தான் பாதுகாப்பு*


*விழிப்போடு இருப்போம்*


*விலகியே இருப்போம்*


*வீட்டிலேயே இருப்போம்*


*வேலையாவது..ஹைகோர்ட்டாவது அதை பிழைத்துக் கொண்டால் அப்போது பார்ப்போம்*


*📰காகிதம் ராஜன்*


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு