ஏற்க மாட்டோம்.. இந்தியாவை சிபிசி லிஸ்டில் சேர்த்த அமெரிக்காவின் யுஎஸ்சிஐஆர்எப்.. மத்திய அரசு கண்டனம்.

சென்னை: இந்தியாவை சிபிசி நாடுகளின் பட்டியலில் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் சேர்த்ததற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு எதிரான அறிக்கையை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது.


USCIRF என்று அழைக்கப்படும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் இந்தியாவிற்கு எதிராக கடும் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.


அதில் இந்தியாவில் மத ரீதியான தாக்குதல்கள் அதிகரித்துவிட்டது, சகிப்புத்தன்மை மொத்தமாக குறைந்துவிட்டது என்று தெரிவித்துள்ளது.


இதனால் இந்தியாவை இந்த ஆணையம் ''குறிப்பாக அக்கறை கொள்ள வேண்டிய நாடு - Country of Particular Concern (CPC) '' என்ற பட்டியலில் சேர்த்துள்ளது.


இந்தியாவில் மத ரீதியான தாக்குதல்கள் அதிகம் உள்ளதாக கூறி இந்த பட்டியலில் இந்தியாவை அந்த ஆணையம் சேர்த்துள்ளது.


இந்தியாவில் மத தாக்குதல் அதிகரித்துள்ளது.. அமெரிக்காவின் யுஎஸ்சிஐஆர்எப் கடும் கண்டனம்.. எச்சரிக்கை!


கடும் கண்டனம்
எந்த நாட்டில் எல்லாம் மோசமாக மத சுதந்திரம் உள்ளது, மத தாக்குதல்கள் உள்ளதோ அந்த நாடுகளை எல்லாம் Country of Particular Concern (CPC) பட்டியலில் இந்த ஆணையம் சேர்க்கும். இந்தியாவை இந்த லிஸ்டில் அந்த ஆணையம் சேர்த்துள்ளது.


இந்தியாவை போல பர்மா, சீனா, ஈரான், நைஜீரியா, வடகொரியா, பாகிஸ்தான், ரஷ்யா, சவுதி அரேபியா, சிரியா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், வியட்நாம் ஆகிய நாடுகளை இதே லிஸ்டில் அந்த ஆணையம் சேர்த்துள்ளது.


கடும் எதிர்ப்பு
இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மத்திய வெளியுவுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிற்கு எதிரான சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. இதை நாங்கள் எதிர்கிறோம். இந்தியாவிற்கு எதிராக இவர்கள் தவறான இப்படி முடிவு எடுப்பது புதிது கிடையாது.


மிக மோசம்
ஆனால் இந்த முறை, அவர்களின் கருத்துக்கள் எல்லை மீறி உள்ளது. இந்த ஆணையத்தில் இருக்கும் சில ஆணையர்கள் கூட இதை ஏற்றுக்கொள்ளவில்லை.


இந்த ஆணையம் தனது பணியில் நேர்மையாக, சரியாக இனியாவது செயல்படும் என்று எதிர்பார்க்கிறோம் என்று மத்திய வெளியுவுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


இதனால்இந்தியா மற்றும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் இடையே சண்டை வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.


பெரிய சண்டை
இந்தியாவிற்கு எதிரான இந்த அறிக்கைக்கு சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தில் உள்ள 9 தலைமை உறுப்பினர்களில் 2 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 1998ல் இருந்து சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் இயங்கி வருகிறது.


இந்தியா பெரும்பாலும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்தை கருத்தில் கொண்டது இல்லை. இதற்கு முன்பே இந்தியாவிற்கும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையத்திற்கும் இடையே கருத்து மோதல்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்