ரேபிட் கிட் விலை என்ன.. எத்தனை வாங்கனீங்க.. வெளிப்படை வேணும்.. முதல்வரை விடாமல் விரட்டும் ஸ்டாலின்

சென்னை: "ஸ்டாலின் கேட்கிறதுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது" என்று முதல்வர் சொன்னாலும், மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பி வருகிறார் திமுக தலைவர்!! ரேபிட் டெஸ்ட் கிட் விலை என்ன, எத்தனை வாங்கினீங்க என்று தற்போது அவர் கேள்விகளை அடுக்கியுள்ளார்.


தமிகத்திலும் வைரஸ் பரவல் பெருகி வருகிறது.. மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு பிறப்பிக்கவும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தடுக்கப்பட்டும், குறைக்கப்பட்டும் வருகிறது.
டெஸ்ட் முடிவுகளை விரைவாக தெரிந்து கொள்ள வெளிநாடுகளில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன..


அரை மணி நேரத்தில் இந்த ரிசல்ட்களை தெரிந்து கொள்ள முடியும் என்கிறார்கள்.. எனவே கொரோனா பரிசோதனை நடத்துவதற்காக ரேபிட் டெஸ்ட் கருவிகளை தமிழக அரசு ஏற்கனவே ஆர்டர் செய்திருந்தது.


அதன்படி சென்னைக்கு முதற்கட்டமாக, 24 ஆயிரம் கருவிகள் வந்தடைந்துள்ளன.. பின்னர் இவைகள் மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு, அதன்மூலம் டெஸ்ட்களும் நடந்து வருகிறது..


தமிழகத்தை போலவே சத்தீஸ்கர் மாநிலத்திலும் ரேபிட் கிட் கருவிகள் கொரியாவில் இருந்து தருவிக்கப்பட்டன.. அவைகளை வைத்து அங்கும் சோதனைகள் விறுவிறுவென நடத்தப்பட்டு வருகிறது.


இந்த சமயத்தில்தான் அம்மாநில மாநில காங்கிரஸ் எம்எல்ஏ டிபி சிங் தியோ, தென்கொரியாவில் இருந்து 75ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் மாநிலத்துக்கு இறக்குமதி செய்யப்பட்டு உள்ளதாகவும், ஒரு கிட்டின் விலை ரூ.337 + ஜிஎஸ்டி என்றும் பகிரங்கமாகவே தெரிவித்தார். அதுமட்டுமில்லை..


மாநில அரசு அதிகாரிகள் மற்றும் இந்தியா, தென்கொரிய நாட்டு தூதரக அதிகாரிகளின் ஒத்துழைப்புடன்தான் இவை வாங்கப்பட்டு உள்ளன என்றும் பெருமையாக கூறியிருந்தார்.


இப்படி சத்தீஸ்கர் அரசு வெளிப்படையாக உள்ளதை குறிப்பிட்டு, திமுக தலைவர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்..


தன்னுடைய ட்விட்டர்பக்கத்தில்,CoronaVirusபரிசோதனைக் அகருவிகள் எத்தனை - என்ன விலை - எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கப்பட்டன என்பதை சத்தீஸ்கர் மாநில அமைச்சர் வெளிப்படையாக அறிவித்தது போல் தமிழக அரசும் அறிவிக்க வேண்டும்.


நாடே உயிர் காக்கப் போராடிவரும் நேரத்தில் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்!," என வலியுறுத்தி உள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்