வேகம் எடுக்கும் கொரோனா உயரும் பாதிப்பு - அதிகரிக்கும் உயிர் பலி
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆயிரத்தைக் கடந்துள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 590 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 ஆயிரத்து 251 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில், சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும், கொரோனா வால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. ( Gfx - in ) இதன்படி, மஹாராஷ்டிராவில் கொரோனாவால் 4 ஆயிரத்து 666 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அங்கு, உயிரிழப்பு 232 ஆக உயர்ந்துள்ளது.டெல்லியில் 2 ஆயிரத்து 81 பேர் பாதிக்கப்பட, உயிரிழப்பு 47 ஆக அதிகரித்துள்ளது.
குஜராத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 939 ஆக உயர்ந்துள்ளது. அம்மாநிலத்தில் பலி எண்ணிக்கை 71 ஆக உயர்ந்தது.
ராஜஸ்தானில்பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 576 ஆக அதிகரித்தது. அங்கு, மேலும் 11 பேர் பலி ஆனதால், உயிரிழப்பு 25 ஆக அதிகரித்தது.
மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி விட்டது.தெலங்கானாவில் 873 பேரும், ஆந்திராவில் 722 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
கர்நாடகா மற்றும் கேரளாவில் தலா 408 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஜம்மு - காஷ்மீரில் 368 பேர், பாதிக்கப்பட, மேற்கு வங்காளத்தில் கொரோனா
பாதிப்பு எண்ணிக்கை 392 ஆக நீடிக்கிறது.
எனவே, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18 ஆயிரத்து 601 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா உயிரிழப்பு 590 ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சை பெற்று வந்த 3251 பேர் குணமடைந்திருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.