மாஸ்குகளால் மட்டுமே கொரோனா தொற்றை தடுக்க இயலாது -WHO...

மாஸ்குகள் எனப்படும் முக கவசங்களை அணிவதால் மட்டுமே கொரோனா தொற்று ஏற்படாது என நம்ப வேண்டாம் என உலக சுகாதார நிறுவனமான WHO கூறியுள்ளது. 


எங்கெல்லாம்  சமூக விலகியிருத்தலுக்கும், கைகளை சோப் போட்டு கழுவுவதற்கும் சிரமம் உள்ளதோ அங்கு மட்டுமே முக கவசங்களை பயன்படுத்த வேண்டும் என  WHO  தலைவர் டெட்ரோஸ் அதாநோம் கெப்ரியேசஸ் (Tedros Adhanom Ghebreyesus) கூறியிருக்கிறார்.


மருத்துவ பணியாளர்களுக்கான மாஸ்குகளை பொதுமக்கள் பயன்படுத்தக் கூடாது என அவர் கேட்டுக் கொண்டார்.


கொரோனா தடுப்பூசி சோதனைகளை ஆப்பிரிக்கர்களிடம் நடத்த வேண்டும் என சில விஞ்ஞானிகள் கூறியுள்ளதை வன்மையாக கண்டித்த அவர், இது ஒரு மேலாதிக்க மனோபாவம் என கண்டனம் தெரிவித்தார்.


இது நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும் என அவர் ஆப்பிரிக்க கண்டத்தவருக்கு உறுதி அளித்துள்ளார்