தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடல் எப்படி அடக்கம் செய்யப்படுகிறது தெரியுமா... கடைசியாக முகத்தை கூட பார்க்க முடியாது..

சென்னை: கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் முகத்தைக்கூட குடும்பத்தினரால் கடைசியாக ஒருமுறை பார்க்க கூட முடியாத கொடூரமான சூழல் நிலவி வருகிறது.


தமிழகத்தில் வேலூரில் கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடல் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பிறகு சாதாரண துணியைக் கொண்டு 3 அடுக்குகள் உடலில் சுற்றப்பட்டது.


அடுத்து பிளாஸ்டிக் பையில் வைத்து மூடப்பட்டு கிருமி நாசினி தெளித்து பிரத்யேக வாகனத்தில் உள்ளாட்சி தூய்மை பணியாளர்கள் ஐந்து பேர் மூலம் கொண்டு செல்லப்பட்டது.


இதை செய்யும் இவர்கள் 5 பேரும் முழுஉடல் பாதுகாப்பு உடை, கவசங்களை அணிந்து கொண்டிருந்தார்கள்.


உறவினர்கள் யாருமே அருகில் அனுமதிக்கப்படவில்லை. உடல் அடக்கம் செய்வதற்காக இடுகாட்டில் 12 அடி ஆழம் தோண்டப்பட்ட குழியில் அதிக அளவு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.


அதில்உடல் இறக்கப்பட்டு மண் போட்டு மூடப்பட்டது. மண் மூடிய பிறகும் அந்த இடம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது மதச் சடங்குகளும் 20 அடி தள்ளி நின்றபடியே நடத்தப்பட்டது..


இறுதியாக அடக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டவர்களின் பாதுகாப்பு உடைமைகள் அங்கேயே அருகில் தீயிட்டு கொளுத்தப்பட்டது. தூய்மை பணியாளர்களின் உடல் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டனர்.


அங்கு வந்த அனைவரின் மீதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)