பத்திரிகைத்துறை சார்ந்தவர்களும் மருத்துவர்கள் போன்ற முன்னணி தொழிலாளர்கள் தான்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

டெல்லி: உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது.


ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,152 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 308 பேர்  உயிரிழந்த நிலையில், 857 பேர் குணமடைந்துள்ளனர்.


கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 796 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 


கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாளை வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.


இருப்பினும், கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தினால், மேலும், ஊரடங்கு நீட்டிக்க பல்வேறு மாநிலங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.


நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்காக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் அத்தியாவசிய சேவைக்காக மட்டும் சில அரசுத் துறைகள் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், அதில் காவல் துறையினர், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களின் பணிகள் மட்டும் தொடர்ச்சியாக அயராது உழைத்து வருகின்றனர்.


தங்கள்உயிரையும் பொருட்படுத்தாமல், தொடர்ந்து சேவை செய்து வரும் டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்டோரை பலரும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார்.


அவர் கூறியதாவது; ஊடக துறையை சார்ந்தவர்களும் மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார், துப்புரவுத் தொழிலாளர்கள் போன்ற முன்னணி ஊழியர்களாகவே உள்ளனர்.


மேலும் கொரோனா நெருக்கடிக்கு மத்திய அரசு எடுக்கும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கவனித்துப் பின்பற்றுமாறு அவர் கூறியுள்ளார்.