டெல்லி தப்லீக் ஜமாஅத் தலைவரின் முதல் பேட்டி...

சமூக மாற்றத்திற்காகவும், மக்கள் நலனுக்காகவும் தப்லீக் ஜமாஅத் அமைப்பு செய்த பணிகளை வரலாறு மறக்காது என நம்புகிறேன்" என அந்த அமைப்பின் தலைவர் மவுலானா சாத் கந்தால்வி தெரிவித்துள்ளார். 


தப்லீக் ஜமாஅத் நிகழ்வு கலந்துகொண்ட பலருக்குக் கரோனா இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், அந்த அமைப்பின் தலைவரான மவுலானா சாத் கந்தால்வி மீது டெல்லி காவல்துறை தொற்றுநோய் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.


இதனையடுத்து, சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் மவுலானா சாத் கந்தால்வி மற்றும் ஜமாஅத் அறக்கட்டளையோடு தொடர்புடைய சிலர் மீது அமலாக்கத்துறை கடந்த வாரம் வழக்குப் பதிவு செய்தது.


இந்தச் சூழலில், மவுலானா சாத் கந்தால்வி நேரில் ஆஜராக வலியுறுத்தி டெல்லி போலீஸார் இருமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.


இந்நிலையில் இந்த சர்ச்சைகள் குறித்து முதன்முறையாக ஐஏஎன்எஸ்-க்குப் பேட்டியளித்துள்ள அவர், "தப்லீக் ஜமாத் அமைப்பை லட்சக்கணக்கான இஸ்லாமிய மக்கள் பின்பற்றுகிறார்கள்.


நாங்கள் எந்தவிதமான கூட்டம் நடத்தினாலும் அதை நம் நாட்டில் உள்ள புலனாய்வு அமைப்புகளுக்குத் தெரியாமல் நடத்த முடியாது.


அவர்களின் கண்காணிப்பிலிருந்து தப்பிக்கவும் முடியாது. முழுமையாக விசாரணை நடத்துவார்கள். சிலரின் கருத்துப்படி நாங்கள் தீவிரவாதத்தோடு தொடர்பிலிருந்தால், அதிகாரிகள் மிகத் துரிதமாக நடவடிக்கை எடுத்திருப்பார்கள்.                    


தப்லீக் ஜமாஅத் அமைப்பு வன்முறைக்கு எதிரானது என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். எங்கள் அமைப்பில் இருப்பவர்கள் யாரும் அரசியலில் ஈடுபடமாட்டார்கள். எந்தவிதமான இயக்கத்திலும் இருக்கமாட்டார்கள்.


ஜமாஅத் என்பது, இறைத்தூதர் முகமது நபியை முன்னோடியாகக் கொண்டு செயல்படும் அமைப்பு. அனைவரின் மீதும் இரக்கம் காட்ட வேண்டும் என்று நபிகள் கூறியதை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறோம்.


தப்லீக் ஜமாஅத் அமைப்பு நூறாண்டுகளுக்கும் மேலான பழமையும் பாரம்பரியமும் கொண்டது. எங்கள் பணி மற்றும் நாங்கள் என்ன செய்கிறோம் என்பது புலனாய்வு அமைப்புகளுக்கும், விசாரணை முகமைகளுக்கும் நன்கு தெரியும்.


நாங்கள் எப்போதும் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தருகிறோம். சமூக மாற்றத்திற்காகவும், மக்கள் நலனுக்காகவும் தப்லீக் ஜமாஅத் அமைப்பு செய்த பணிகளை வரலாறு மறக்காது என நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்