மதத்தைக் காரணம் காட்டி இஸ்லாமியர் டெலிவரி செய்த பொருள்களை வாங்க மறுத்தவர் கைது!

இளைஞர் காரணம் கேட்டபோது, முஸ்லிம் டெலிவரி செய்த பொருள்களை வாங்கப்போவதில்லை என்றும் இஸ்லாமிய மக்கள் குறித்து கொச்சையான கருத்துகளைக் கூறி அவரிடத்தில் சண்டையிட்டார்.


மும்பை, மீரா ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சுப்ரியா சுதுர்வேதி. கொரோனா காரணமாக வெளியே செல்ல முடியாத சுப்ரியா அந்தப் பகுதியில் உள்ள மளிகை ஸ்டோரிலிருந்து பொருள்களை இன்று ஆர்டர் செய்துள்ளார்.


ஆர்டர் செய்த பொருள்களை டெலிவரி செய்ய பர்கத் என்ற 32 வயது இளைஞர் சுப்ரியா வீட்டுக்குக் கொண்டு வந்துள்ளார்.


பொருள்களை சுப்ரியா செக் செய்து கொண்டிருக்கும்போது, அவரின் கணவர் காஞ்சன் அங்கே வந்துள்ளார். டெலிவரி செய்த இளைஞரின் பெயரைக் கேட்டுள்ளார்.


இஸ்லாமிய பெயராக இருந்ததால், உடனே தன் மனைவியிடம் பொருளை, வாங்காமல் திருப்பிக் கொடு என்று கூறியுள்ளார்.


இளைஞர் காரணம் கேட்டபோது, முஸ்லிம்கள் டெலிவரி செய்த பொருள்களை வாங்கப்போவதில்லை என்றும் இஸ்லாமிய மக்கள் குறித்து கொச்சையான கருத்துகளைக் கூறி டெலிவரி இளைஞரிடத்தில் சண்டையிட்டார்.


நடந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்துக்கொண்ட இளைஞர் காஷ்மீரா பகுதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.


 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு