உள்ளூர் தபால் அலுவலகத்திற்கு தொடர்புக் கொண்டு பணத்தை பெறலாம்

திருப்பூர்:எந்த வங்கிக்கணக்கில் இருந்தும் தபால் நிலையங்கள் வழியாக, 15 நிமிடத்திற்குள் பணத்தை நேரடியாக பெறும் வசதியை தபால்துறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வங்கிகள் இல்லாத கிராமங்களில் வசிப்பவர்கள் ஏ.டி.எம்., சென்று பணம் எடுக்காமல் தவிக்கின்றனர்.


இந்த நிலையில், உள்ளூர் தபால் அலுவலகத்திற்கு தொடர்புக் கொண்டு பணத்தை பெறலாம் என்றும் இதற்காக, அஞ்சலகங்களில் கணக்கு வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த மாதம் 24 முதல் ஏப்ரல் 23ம் தேதி வரை 412 கோடி பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாகவும் தபால் துறை தெரிவித்துள்ளது.


ஆதார்எண் அடிப்படையில் பணப்பரிமாற்றம் கருவி மூலம், வீடுகளுக்கே பணம் அளிக்க நாடு முழுவதும், 2 லட்சம் அஞ்சலக பணியாளர்கள் உள்ளனர்.


திருப்பூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.விரும்புவோர், 86675 21689, 88837 08710, 99614 21672, 77088 73049, 80754 94635 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என, திருப்பூர் தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்