சென்னை திருவல்லிக்கேணியில் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை மேற்கொள்கின்றனர்

 


சென்னை திருவல்லிக்கேணியில் 6 தெருக்களைச் சேர்ந்த பொதுமக்கள் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


திருவல்லிக்கேணியில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்ததால் அவர்கள் குடியிருந்த 6 தெருக்களிலும் வெளியாட்கள் உள்ளே செல்லவும், உள்ளே இருந்து வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் பாதிக்கப்பட்ட வீடுகளின் அருகில் உள்ள மற்ற வீடுகளில் உள்ளோர் தங்களுக்கும் வைரஸ் தொற்று இருக்குமோ என்ற அச்சத்தால் பரிசோதனை மையத்திற்குத் தாங்களாகவே வந்து பரிசோதனை செய்து வருகின்றனர்.


பாதுகாப்பான கண்ணாடித் தடுப்புக்குப் பின் இருந்து ஆய்வக உதவியாளர்கள் சளி மாதிரிகளை எடுத்துச் சேகரிக்கின்றனர்.


இந்த மாதிரிகள் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உள்ள ஆய்வகத்தில் சோதிக்கப்பட்டு 3 அல்லது நான்கு நாட்களில் முடிவுகள் அறிவிக்கப்படும்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)