பகை கிடக்குது.. விடுங்க.. வெண்டிலேட்டர் வேணுமா.. தாராளமா கேளுங்க தர்றோம்.. ஈரானுக்கு டிரம்ப் ஆஃபர்!

வாஷிங்டன்: என்னதான் ஆயிரத்தெட்டு பகை இருந்தாலும், முக்கியமான எதிரி நாடாக இருந்தாலும் ஈரானுக்கு உதவி செய்ய டிரம்ப் முடிவு செய்துவிட்டார்..


"ஈரானுக்கு வெண்டிலேட்டர்கள் வேணும் என்றால் என்கிட்ட தாராளமா கேட்கலாம்.. நாங்க வழங்க தயாராக இருக்கிறோம்" என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.


உலகம் முழுவதும் வைரஸ் பரவி வரும் நிலையில், ஒவ்வொரு நாடும் அதை கட்டுப்படுத்த போராடி வருகிறது.. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எவ்வளவு மேற்கொண்டாலும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த முடியவில்லை.. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையையும் குறைக்க முடியவில்லை.


அந்த வகையில், ஈரானும் இதில் முக்கியமான நாடு.. பல வருடமாகவே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது.. கொரோனா வைரசின் பரவலை எதிர்த்து போராடுவதற்கான தங்களது முயற்சிகளுக்கு இந்த பொருளாதார தடைகள் மிகப்பெரிய தடங்கலாகவும், பிரச்சனையாகவும், இடையூறாக இருப்பதாக ஈரான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.


இதனால் அமெரிக்காவை விட மாட்டோம்.. உண்டு இல்லை என ஒரு கை பார்த்துவிடுவோம் என முழங்கி வந்தது.. முழு மத்திய கிழக்கு பிராந்தியத்தையும் கைப்பற்றவும் முயற்சி செய்தது.. ஆனால் இப்போது தங்கள் நாட்டு பலி எண்ணிக்கையை பார்த்து அரண்டு கிடக்கிறது.. மிச்சமிருப்பவர்கள் உயிர்பிழைத்தால் போதும் என்கிற நிலைமைக்கு வந்துவிட்டது.


இந்த சமயத்தில்தான் டிரம்ப் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஈரானில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான வெண்டிலேட்டர்களை வழங்க தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.. வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் அதிபர் பேசியதாவது: ஈரான் ரொம்பவும் வித்தியாசமான நாடு.. எனக்கு இது தேவையில்லை...


எனினும் அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு உதவி செய்ய நான் முன்வருவேன்.. வெண்டிலேட்டர்கள் வேணும்னு நினைத்தால், அவர்கள் என்னிடம் உதவி கேட்கலாம்.. நான் அவர்களுக்கு தேவையான வெண்டிலேட்டர்களை அனுப்புவேன். எங்ககிட்ட ஆயிரக்கணக்கான வெண்டிலேட்டர்கள் அதிகப்படியான இருக்கின்றன" என்றார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)