டிக்டோக்கில் டீன் ஏஜ் பருவத்தினருக்கு புதிய கட்டுப்பாடு..

கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டுக்குள் முடங்கி இருக்கும் மக்கள் , பொழுதுப்போக்கு செயலியான டிக்டோக்கில் அதிகளவில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக 16 வயதுகுட்பட்ட டீன் ஏஜ் பருவத்தினர் அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.


இதனை குறைக்கும் விதமாக ஃபேமிலி பேரிங் (Family Pairing ) என்ற புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. பெற்றோர்கள் இந்த புதிய வசதி மூலம் தங்களது குழந்தைகள் டிக்டோக் செயலியில் அதிக நேரம் செலவிடுவதையும், மற்றவர்கள் நேரடியாக தகவல் அனுப்பும் வசதியை கட்டுப்படுத்த முடியும்.


கூடுதலாக 16 வயதுக்கு உட்பட்டோருக்கு தனிப்பட்ட முறையில் நேரடி தகவல் (Direct Message)அனுப்பும் வசதியை முடக்கியுள்ளது.


இது தொடர்பாக டிக்டோக் தனது வலைதளத்தில், புதிய குடும்ப இணைத்தல் வசதி மூலம் பெற்றோர்கள் தங்களது டிக்டோக் கணக்கை, குழந்தைகளின் கணக்குடன் இணைத்து கொள்ளலாம்.


மேலும் யாருக்கெல்லாம் நேரடியாக தகவல் அனுப்ப முடியுமென்பதை ஸ்கிரீன் டைம் மேனேஜ்மெண்ட் மூலம் கட்டுப்படுத்த இயலும்.மற்றொரு அம்சமாக கட்டுப்படுத்தப்பட்ட பயன்முறை (Restricted Mode) சேர்த்துள்ளது.


ஆனால் அதில் என்னென்ன பயன்பாடு என்பதைதெளிவுப்படுத்தவில்லை.இதனுடன் கூடுதலாக, டீன் ஏன் பயனர்களுக்கு நேரடி தகவல் அனுப்பும் அம்சத்தை முற்றிலுமாக முடக்கியுள்ளது. புதிய நட்பு வட்டத்தை ஏற்படுத்த நேரடி செய்தி முக்கிய பங்கு வகிக்கிறது. பயனர்களின் பாதுகாப்பு முக்கியமானது.


இளம் பயனர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வரும் ஏப்ரல் 30 முதல் 16 வயதிற்கு உட்பட்டோரின் டிக்டோக் கணக்குகளில் நேரடி தகவல் அனுப்பும் வசதி தானாக முடக்கப்படும் என அறிவித்துள்ளது.


டிக்டோக்கில் அனுமதிக்கப்பட்ட பயனரிடம் இருந்து மட்டுமே செய்திகளை பெறும் வசதி முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டது.


வீடியோ மற்றும் புகைப்படங்களை மற்றொரு பயனருக்கு தகவலாக அனுப்ப முடியாதென்பது குறிப்பிடத்தக்கது.