குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு
குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து 125 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 500 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் பணியாளர்களுக்கு குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அங்கு வசிக்கும் ஒருவருக்கு கொரோனா உறுதிப்படுத்தபட்டதையடுத்து கடந்த சனிக்கிழமை அந்தக் குடும்பத்தினரும் சுற்று வட்டாரத்தில் உள்ள 30 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது மேலும் 95 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா உறுதிப்படுத்தப்பட்டவரின் தாயார் தூய்மைப் பணியாளர் என்றும், அவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.