ரேஷன் பொருட்கள் வினியோகம் தொடர்பான வழக்கு..

குடும்ப அட்டைகள் இல்லாத தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கக் கோரிய வழக்கில், ஒரு வாரத்தில் அறிக்கை அளிப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள புலம் பெயர்ந்து தமிழகத்தில் தங்கியுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு, ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளின் அடிப்படையில் ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என கோரப்பட்டு இருந்தது.


இந்த மனு மீதான விசாரணையின் போது, புலம் பெயர்ந்தவர்களுக்கு அரிசி, பருப்பு போன்றவை வழங்கப்பட்டுள்ள நிலையில், ரேஷன் பொருட்கள் முழுமையாக வழங்கிய பிறகு 1 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.