ஹைட்ராக்சிகுளோரோகுயின், பாராசிட்டமால் ஏற்றுமதிக்கு பகுதி அளவு தடை நீக்கம்..

ஹைட்ராக்சிகுளோரோகுயின், பாராசிட்டமால் மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு இருந்த தடை பகுதியளவு நீக்கப்பட்டுள்ளது. 


உலக நாடுகளில் கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வரும் நிலையில், அதற்கு மருந்தாகப் பயன்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மார்ச் 25ஆம் தேதி வணிகத்துறை அமைச்சகம் தடை விதித்தது.


தடை விதிக்குமுன்பே ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை வாங்க அமெரிக்க நிறுவனங்கள் கொள்முதல் ஆணைகள் வழங்கி இருந்தன.


முன்கூட்டிக் கொள்முதல் ஆணை வழங்கப்பட்ட மாத்திரைகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் வெளியுறவு அமைச்சகம், வேதிப்பொருட்கள் அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்துபேசினர்.


அதில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள், பாராசிட்டமால் மருந்து ஆகியவற்றின் இருப்பு, உள்நாட்டுத் தேவை ஆகியவற்றைப் பொறுத்து, ஏற்கெனவே பெற்றுள்ள ஆர்டர்களுக்கு ஏற்றுமதி செய்ய மனிதாபிமான முறையில் அனுமதிக்கலாம் எனத் தீர்மானித்தனர்.


இதையடுத்து ஹைட்ராக்சிகுளோரோகுயின், பாராசிட்டமால் மருந்துகள் ஏற்றுமதிக்கு இருந்த தடை பகுதியளவு நீக்கப்பட்டுள்ளது.


இந்த மருந்துகளை இந்தியாவை சார்ந்திருக்கும் நாடுகள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு எவ்வளவு ஏற்றுமதி செய்வது என்பதை வேதிப்பொருட்கள் அமைச்சகமும், வெளியுறவு அமைச்சகமும் இணைந்து தீர்மானிக்கும்.


Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
‘நீ செத்துப் போ.. நா வீடியோ எடுக்கற’ : மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்ததை வீடியோ எடுத்த கணவன்!!!
Image
சிக்னலில் நின்ற பெண்ணிடம் பணம் கேட்ட திருநங்கை: தர மறுத்ததால் ஆபாச பேச்சு…முகம் சுழிக்க வைத்த செயல்..!!
Image
தி.மு.க மூத்த தலைவரை பொதுவெளியில் விமர்சித்த நிதி அமைச்சர் #PTR - உச்சக்கட்டத்தில் உட்கட்சி பூசல்! https://kathir.news/news/-ptr--1204682
Image
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உள்பட அவரது ஆதரவாளர்கள் 11 பேர் மீது வழக்கு
Image