அரசு தரும் அரிசி எங்களுக்கு வேணாம்.. திருத்துறைபூண்டி பள்ளிவாசல்கள் திடீர் முடிவு..

திருவாரூர்: "ரம்ஜான் கஞ்சிக்கு அரசு தரும் சலுகை அரிசி எங்களுக்கு வேண்டாம்.. சிஏஏ, குடியுரிமை சட்டம், என்ஆர்சி, என்பிஆர் போன்றவைகளை நடைமுறைப்படுத்த மாட்டோம் என தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றாமல் உள்ளது..


இதனை கண்டித்தும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்" என்று திருத்துறைப்பூண்டியின் அனைத்து பள்ளிவாசல்களும் அதிரடி முடிவினை எடுத்துள்ளன.


ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்குவதற்கான அனுமதியை கடந்த 2001-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். அதன்படி, பள்ளிவாசல்களுக்கு தேவையான அரிசி வருடா வருடம் வழங்கப்பட்டு வருகிறதுஇது இஸ்லாமிய மக்களுக்கு பெரிதும் உதவுகிறது..


கடந்த வருடம்கூட, இந்த ஆண்டு நோன்பு தொடங்கும் முன்னரே அரிசி வழங்குமாறு இஸ்லாமிய மக்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. இதை ஏற்று, அரிசிக்கான அனுமதியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்க உத்தரவிட்டிருந்தார்.


அதன்படி இந்த வருடமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. வரும் 19-ம் தேதிக்ககுள் நோன்பு கஞ்சிக்கான அரிசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக செயலாளர் சண்முகம் அறிவித்து இருந்தார். ஆனால் இந்த அரிசியை தாங்கள் ஏற்றுக் கொள்ள போவதில்லை என திருத்துறைப்பூண்டி பள்ளிவாசல்கள் அறிவித்துள்ளன.


இதற்கு காரணம் சிஏஏ விவகாரம்தான்.இதுசம்பந்தமாக அவர்கள் தெரிவிக்கையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டம், என்ஆர்சி, என்பிஆர் போன்றவைகளை நடைமுறைப்படுத்த மாட்டோம் என தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றாமல் உள்ளது..


அவைகளுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றாததை கண்டித்தும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம்.


அதனால் அரசு தரும் சலுகை அரிசி எங்களுக்கு வேண்டாம், திருத்துறைப்பூண்டி சட்டமன்றத்துக்குட்பட்ட நூற்றுக்கும் அதிகமான பள்ளிவாசல்கள் முடிவு செய்திருக்கின்றன..


இது சம்பந்தமான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது" என்றனர். இந்த அறிவிப்பு அதிர்ச்சியை தந்து வருகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்