பம்பரமாய் சுழலும் திருவள்ளூர் எஸ்.பி. அரவிந்தன்...! முதலமைச்சர் பாராட்டு..
கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் கால கட்டத்தில், திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி அரவிந்தன் பம்பரமாக சுற்றி கடமையாற்றி வருகிறார்.
தனது மாவட்ட போலீசார் நலனைக் காப்பதுடன், மக்கள் சேவையிலும் கவனம் செலுத்திவருகிறார். நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வேலையை எளிதாக்குவதே ஐபிஎஸ் அதிகாரி அரவிந்தனின் பலம்.
தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான வெளிமாநிலத்தவர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பது திருவள்ளூர் மாவட்டத்தில்தான். 16 ஆயிரம் இடம்பெயர்ந்த தொழிலாளர்களை 278 மையங்களில் தங்கவைத்து, தலா 5 இடங்களை ஒரு காவல் நிலையத்திற்கு ஒதுக்கி, அவர்களை செயலி மூலம் கண்காணித்து வருகிறார்.
தொழிலாளர்களுக்கு போதிய வசதிகள் செய்யபப்பட்டுள்ளதா, உணவு கிடைக்கிறதா? மருந்து பொருட்கள் கிடைக்கிறதா? என்பதை ஆய்வு செய்து உடனடியாக தேவையை ஆப் மூலம் தரவேற்றம் செய்கிறது அரவிந்தனின் குழு. இவரது யோசனை வெற்றிகரமான திட்டமாக மாறியதால், மற்ற மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுவருகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் வீட்டுத்தனிமையில் வைக்கப்பட்டவர்களை கண்காணிக்க தனியாக ஒரு செயலியை தயாரித்ததுடன், தொடர்ந்து சிறப்பாக அத்திட்டத்தை செயல்படுத்திவருகிறார் அரவிந்தன்.
கொரோனா காலத்தில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதில் இவரது திட்டம் முன்னோடியானது என்று சொல்வதில் மாற்றுக்கருத்து இல்லை.
தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரும் நபர்களை லத்தியால் அடிக்காமல், அவர்களை கட்டுப்படுத்த மஞ்சள் கரைசலை ஊற்றியது, திருவள்ளூர் மாவட்ட போலீசாரின் புதுவித யுக்தி அனைவரையும்
தாமரைப்பாக்கம்பகுதியில் விவசாயி கார்த்திக் போலீசார் தன்னை போலீசார் சந்தைக்கு பயணிக்க மறுத்ததால், சாலையில் காய்கறிகளை கொட்டி போராட்டம் நடத்தினார். தகவல் அறிந்தவுடன், களமிறங்கிய எஸ்.பி அரவிந்தன், நேரடியாக விவசாயியின் வீட்டுக்குச்சென்று மன்னிப்புக்கேட்டார். அத்தோடு, உரிய இழப்பீட்டையும் கொடுத்தார்.
அரவிந்தனின் இந்த செயல், சிறந்த தலைமைப்பண்பை காட்டுவதாக பாராட்டுக்கள் குவிந்தன. ஆனால், தவறிழைத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க அரவிந்தன் தவறவில்லை.
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள பல்லவன் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற 12 வயது சிறுவனுக்கு ஒரு சிறுநீரகம் செயலிழந்த நிலையில் சிகிச்சைக்கு தேவையான மருந்து, மாத்திரைகளை வாங்க முடியாமல் அவரது குடும்பம் அவதியுற்று வந்துள்ளது.
இதுகுறித்து பாதிரிவேடு காவல் நிலையம் மூலம் தகவல் அறிந்த எஸ்.பி அரவிந்தன், ஆயுதப்படை காவலர் மற்றும் ஊர்க்காவல் படையினரை சென்னைக்கு அனுப்பி உரிய மாத்திரைகளை வாங்கி வந்து பெற்றோர்களிடம் ஒப்படைத்தார். இந்த நடவடிக்கை பலராலும் பாராட்டப்பட்டுவருகிறது.
செங்கல் தொழிலகங்கள், அரிசி ஆலை உள்ளிட்டவைகளில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளிகளுக்கு உணவு அளிப்பதிலும் தேடிச்சென்று வாழ்வாதாரத்திற்கு தேவையான அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்குவதிலும் அரவிந்தன் முனைப்பு காட்டி வருகிறார்.
தமிழக ஆந்திர எல்லையை கண்காணிப்பதுடன், ட்ரோன் உதவியுடன் கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பலை கைது செய்துவருகிறது அரவிந்தன் தலைமையிலான குழு.
ஊரடங்கால் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ள பழங்குடியினர், இருளர் சமுதாய மக்களை தேடிச்சென்று உதவி செய்வதில் அதிக ஆர்வம் காட்டிவருகிறார் இளம் போலீஸ் அதிகரியான அரவிந்தன். இந்த நிலையில்தான், காவல் கண்காணிப்பாளர் அரவிந்தனின் பணிகளை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டியுள்ளார்.