நெல்லை டவுனில் பால் விற்பனையாளர்களுக்கு போலீசார் இன்று திடீரென தடை விதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பால் விற்பனையாளர்கள் போலீஸ் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளனர்.

நெல்லை டவுனில் பால் விற்பனையாளர்களுக்கு போலீசார் இன்று திடீரென தடை விதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து பால் விற்பனையாளர்கள் போலீஸ் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளனர்.


நெல்லை மாநகர பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பால் விற்பனையாளர்கள் தினமும் காலை, மாலை வேளைகளில் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று பால் விற்பனை செய்து வருகின்றனர்.


இவர்கள் கேனில் பாலை எடுத்து வந்து, வீடு, வீடாக சென்று கால் லிட்டர், அரை லிட்டர், ஒரு லிட்டர் என பொதுமக்களின் தேவைக்கேற்ப சப்ளை செய்வது வழக்கம். வாடிக்கையாளர்களுக்கு மாத கணக்கு அடிப்படையிலும் வழங்குவதுண்டு.


பால் கேன் விற்பனையாளர்கள் அதிகாலை 5 மணி முதலே களம் இறங்கி, வீடு, வீடாக ால் சப்ளை செய்வது வழக்கம். நெல்லை டவுனில் உள்ள வீடுகளுக்கு, புறநகர் பகுதிகளான கல்லூர், சுத்தமல்லி ஆகிய பகுதிகளில் இருந்து அதிக பால் விற்பனையாளர்கள்


இருசக்கர வாகனங்களில் வருவதுண்டு. இந்நிலையில் இன்று காலையில் வீடு, வீடாக பால் சப்ளை செய்து கொண்டிருந்த பால் விற்பனையாளர்களிடம் சமூக இடைவெளியை காரணம் காட்டி போலீசார் திட்டியதாக கூறப்படுகிறது. கூட்டம் அதிகமாக இருந்தால் பால் விற்பனை கூடாது என கூறியுள்ளனர்.


இதனால் அதிர்ச்சியடைந்த பால் விற்பனையாளர்கள் ஒரிடத்தில் திரண்டு மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணனிடம் இதுகுறித்து புகார் தெரிவித்தனர்.


அவர் ஆலோசனையின் பேரில், பால் விற்பனையாளர்கள் உரிய சமூக இடைவெளியை பின்பற்றி வீடுகளுக்கு பால் சப்ளை செய்ய வேண்டும்.


பால் விற்பனையாளர்கள் ஒரிடத்தில் கூடி நிற்பதும் கூடாது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன. அதன்பேரில் பால் விற்பனையாளர்கள் கலைந்து சென்றனர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்