டில்லி மாநாட்டில் பங்கேற்ற 960 வெளிநாட்டினர் விசா ரத்து....

டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்று அசாம் திரும்பிய 503 பேரை தேடும் பணி தீவிரம்


டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு, அசாம் திரும்பி வந்த 503 பேரை தேடும் பணி இரவு பகலாக நடைபெறுகிறது.


டெல்லியில் கடந்த மாதம் நடைபெற்ற அந்த மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு திரும்பிய சிலருக்கு, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா தொற்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.


அந்த மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு அசாம் மாநிலத்துக்கு 503 பேர் திரும்பி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இதைத் தொடர்ந்து, 503 பேரையும் தேடி கண்டுபிடிக்கும் பணி இரவு - பகலாக தீவிரமாக நடைபெறுகிறது.


அவர்கள் குறித்து தகவல் தெரிந்தால், 104 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரியபடுத்தும்படி  அசாம் மக்களை அந்த மாநில அரசு கேட்டுக் கொண்டுள்ளது