மாநகராட்சி ஊழியர், குடும்பத்தினர் உட்பட மேலும் 8 பேருக்கு கொரோனா
சென்னை ஏழு கிணறு பகுதியில் மாநகராட்சி ஊழியர், அவரது குடும்பத்தினர் உட்பட மேலும் 8 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட ஏழுகிணறு பகுதியில் வசித்து வரும் மாநகராட்சி ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ராயபுரம் மண்டல அலுவலகத்தில் பணிபுரியும் அவர் மூலம், அவரது மனைவி, மகன் மற்றும் பக்கத்து வீட்டில் உள்ள 2 வயது குழந்தைக்கும் தொற்று பரவியது கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 60 வயது மூதாட்டி மூலம் அவரது குடும்பத்தினர் 5 பேருக்கும் தொற்று பரவியுள்ளது. ஏழு கிணறு பகுதியில் ஏற்கனவே இருவருக்கு கொரோனா இருந்த நிலையில் ஒரே நாளில் மேலும் 8 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ராயபுரம் மண்டலத்தில் மாநகராட்சி ஊழியர்கள் 4 பேருக்கு இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.