காசிமேடு காஞ்சிபுரம் 75 திருநங்கைகளுக்கு காய்கறி பொருட்களை திருவல்லிக்கேணி பகுதி கழக மு.து.செயலாளர் செய்யதலி வழங்கினார்

சென்னை காசிமேடு, காசிபுரம் முதல் தெருவிலும் அதன் சுற்றுவட்டார பகுதியில் ஏழ்மையால் வாடும் சுமார் 75 திருநங்கைகளுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான அரிசி, காய்கறி வகைகள், பேஸ் மாஸ்க், சானிடைசர் அடங்கிய பொருட்களை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி கழக மு.து.செயலாளர் த.செய்யது அலி இப்ராஹிம், குமரி கிழக்கு மாவட்ட பாசறை செயலாளர் த.ஷாநவாஸ், எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள் M.பைசுதீன், நந்தா ஆகியோர் வழங்கினர். இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் நவீனா சிவாஜி, மில்லா, இளைஞர் பாசறை நிர்வாகிகள் வினோத், ரஞ்சித் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். பொருட்களை பெற்ற திருநங்கைகள்,தமிழக முதல்வர் அவர்களுக்கும் தமிழக அரசுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்.