கோவையில் இன்று 6 காவலர்களுக்கு கொரோனா உறுதி.

கோவையில் இன்று 6 காவலர்களுக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் போத்தனூர் காவல்நிலையத்தை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.


கோவையில் கடந்த நான்கு நாட்களாக 544 காவல் துறையினருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 537 பேரின் பரிசோதனை முடிவுகள் வந்துள்ளன.


அன்னூர் காவல் நிலைய பெண் காவலருக்கு ஏற்கனவே கொரொனா உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இன்று போத்தனூர் காவல் நிலையத்தில் 2 பெண் காவலர்கள் உட்பட 4 போலீசாருக்கும், ஒரு ஆயுதப் படைக் காவலருக்கும், குனியமுத்தூர் காவல் நிலைய காவலருக்கும் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


போத்தனூர் காவல் நிலைய காவலர்கள் தனிமைப் படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.


காவல்நிலையம் தற்காலிகமாக வேறு இடத்தில் சில நாட்கள் இயங்கும். இதனிடையே பாதுகாப்பு கருதி, கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள உணவகம் மூடப்பட்டுள்ளது